உலக அழிவிற்கான இரு பீதிகரமான காரணங்கள்!

உலக அழிவு எனப்படும் இந்தப்பதமானது தற்போதைய உலகை ஆட்டிப்படைக்கும் செய்தியாக காணப்படுகின்றது. இப்படியான செய்திகளில் உண்மைகள் உண்டா? அல்லது உலகம் அழிவடையும் எனக் கூறப்படும் முக்கிய காரணங்களைப் பற்றி சற்றே அலசிப்பார்க்கலாம்.
உலக அழிவு என்றால், “இந்தக் கதையை எத்தனையோ தடவை கேட்டுவிட்டோம் பொய் கதைகள் வேண்டாமே”, “அழிந்தால் அழியட்டும்” என்ற இருவகை பதில்கள் கிடைக்கும். அதிலும் இந்தபிரபஞ்சமே படைக்கப்பட்டது பூமிக்காக மட்டுமே, பிரபஞ்சத்தில் நாம் மட்டுமே வாழ்கின்றோம் இந்த உலகுக்கு அழிவே கிடையாது என நம்புகின்றவர்களும் இல்லாமல் இல்லை.
பிரபஞ்சத்தில் பூமி என்பது மிகச்சிறு புள்ளி மட்டுமே, பூமியைப்போன்ற அல்லது பூமிக்கு நிகரானதும் , சூரியன்களும், சந்திரன்களும், பால்வீதிகளும் எண்ணில் அடங்காமல் பிரபஞ்ச வெளியில் உள்ளது என்பதே உண்மை.
அப்படிபார்க்கும் போது தொடங்கப்பட்ட இயக்கத்திற்கு முடிவு வந்தே தீரும். அதாவது பூமியின் அழிவு நிச்சயம் ஆனால் எப்போது நடக்கும் என்பதே அந்த பிரதான கேள்வி. அதற்கு விடைகாணும் முயற்சி பலனற்றது, அதனால் பூமியின் அழிவுக்காக கூறப்படும் பிரதான காரணங்களைப் பார்க்கலாம்.
வேற்றுக்கிரகவாசிகள் பூமியை அழிப்பார்கள் என்பது பலரது வாதம். என்றாலும் பிரபஞ்சத்தில் பூமியைப்போன்று எத்தனை எத்தனையோ கிரகங்கள் காணப்படும் போது பூமியை மட்டும் அவர்கள் தாக்குவார்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத வாதம்.
அதனையும் தாண்டி வேற்றுக்கிரகவாசிகள் சிலவேளை எதிரிகள் அல்லாது நண்பர்களாகவும் கூட இருக்க வாய்ப்புள்ளது. அதனால் அவர்கள் பூமியைத் தாக்கி அழிப்பார்கள் என்பது இப்போதைக்கு நடக்காது என்றாலும் இது நடக்கவே நடக்காது என்றில்லை நடந்தாலும் நடக்கலாம்.
அடுத்தது எரிகல் மோதல் மூலமாக பூமி அழிக்கப்படும் என்ற கருத்துகளும் அடுத்தடுத்து வந்துபோகும். உண்மையில் இதற்கான வாய்க்குகள் மிகமிகக் குறைவு.
அதாவது அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் பூமிமீது எங்கோ உள்ள விண்கல் அல்லது சிறுகோள் மோதலாம் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடயதோர் வாதமே. ஆனாலும் பிரபஞ்சத்தின் விதிப்படி அனைத்துமே ஓர் விதிக்கப்பட்ட இயக்கத்திற்குள் இயங்கி வருகின்றது.
அதனை விடுத்து பூமிமீது பாரிய விண்கல் திடீரென வந்து மோதும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் சிறு சிறு விண்கற்கள் பூமிமீது மோதும் வாய்ப்புகள் இல்லாமல் இல்லை. எனினும் அப்படி சிறுகல் மோதல் ஏற்படுவதை முன்கூட்டியே அறிந்து தடுக்கும் தொழில் நுட்பம் இப்போது உலகில் உண்டு என்பதே உண்மை.
தற்போதைய அறிவியல் வளர்ச்சிபடி எதிர்காலத்தில் பூமிமீது தாக்குதலை நடத்தும் விண்கல் இதுவரை தென்படவில்லை என்பதே உண்மை ஆனால் அப்படி நடக்கும் வாய்ப்புகளும் இல்லாமல் இல்லை. அதுவரை விண்கல்லினால் பூமிக்கு ஆபத்து இல்லை என்பது இப்போதைக்கு நிச்சயம்.
அடுத்தது பிணன் அதாவது சோம்பிஸ் மூலமாக உலகம் அழியும் என்பது பலரது வாதம். இதனை பொய் என்று ஒதுக்காமல் விட்டாலும் பிணன் மூலமாக உலகம் அழிவடையும் என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.
அதாவது ஓர் வைரஸ் பரவி அதன் மூலம் பிணங்களுக்கும் உயிர் வந்து அவை மனித இனத்தையே அழிக்கும் என்பது பலர் முன்வைக்கும் வாதம். அப்படி ஓர் வைரஸ் தோன்றினாலும் மனிதர்கள் அதனை அழித்து விடுவார்கள் என்பது உண்மை.
ஆயுதமற்ற நிலையில் தாக்கவரும் பிணன்களை மனித குலம் எளிதாக எதிர்கொண்டு வெற்றி பெற்றுவிடும் என்பதே உண்மை அதனால் சோம்பீஸ் உலகத்தை அழித்து விடுவார்கள் என்பதை ஓர் பொய்யாகவே கொண்டு விடலாம் அச்சமே தேவையில்லை.
அடுத்தபடியாக உலக அழிவிற்கு காரணமாக கூறப்படுவது நுண்ணறிவுக் கோட்பாடு. அதாவது மனிதரை விடவும் சக்தி மிக்கதாக ரோபோக்கள் மாறும், செயற்கை நுண்ணறிவு மூலமாக இது நடத்தப்படும் அப்படி நிகழும்போது ரோபோக்கள் மனிதர்களை கட்டுப்படுத்தும் இதனால் உலக அழிவு சாத்தியம் என பல ஆய்வாளர்கள் கூயிவருகின்றனர். ஏன் தற்போதைய உலகின் பிரபல விஞ்ஞானிகளும் இதனையே கூறுகின்றார்கள்.
ஆனால் இயந்திரங்களுக்கு சக்தி கொடுத்து உருவாக்கும் மனிதர்களே அவற்றினை எளிதாக அழித்துவிடுவார்கள். அதனால் செயற்கை நுண்ணறிவினால் உலகம் அழியும் என்பதை ஆய்வாளர்கள் மறுக்கின்றார்கள். ஆனாலும் உலக அழிவில் தற்போது பிரதானமாக நோக்கப்படுவது செயற்கை நுண்ணறிவே என்பது மட்டும் ஏன் எனப் புரியவில்லை.
துருவமாற்றத்தினால் உலகம் அழியும் என பலர் தெரிவித்து வருகின்றனர். அதாவது பூமி தலைகீழாகும் அப்போது உலகம் அழிந்துவிடும் என்கின்றனர். இப்படி நடக்கும் சாத்தியக் கூறுகள் மிகமிகக் குறைவு அதனால் இந்த விடயம் தொடர்பில் அச்சப்படவேண்டாம் என ஆய்வாளர்கள் ஆணித்தரமாக கூறுவதால் இந்த காரணத்தைப் பற்றி பேசவேண்டிய அவசியம் இல்லை.
அப்படி என்றால் உலகம் எப்போது அழியும்? ஏன் இந்தக் கோட்பாடுகள் அடிக்கடி உருவாகின்றன என்ற கேள்விகள் இப்போது உதிப்பதை உணர்ந்து கொள்ள முடிகின்றது.
அவ்வகையில் உலகம் அழியும் என நம்பப்படுகின்ற பிரதான விடயங்கள் இரண்டு ஒன்று பாரிய எரிமலை வெடிப்பு மற்றையது மூன்றாம் உலகப்போர், இந்தக் காரணங்களால் உலகம் அழிவடையும் என்தே உண்மை எனப்படுகின்றது.
எரிமலை வெடிப்பு என்பது சாதாரண விடயம் அல்ல பாரிய எரிமலை வெடிப்பினால் ஏற்படும் சாம்பல், சூரிய மண்டலத்தையே மறைத்துவிடும் அதனால் மாறுபட்ட உணவு சங்கிலி தோன்றி பூமிக்கிரகம் வளர முடியாதபடி செய்துவிடும். இப்போதும் பூமியை அழிக்கவல்ல எரிமலைகள் உறங்கியபடியும், புகைவிட்டபடியும் இருக்கின்றது என்பதை நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும்.
அடுத்தது உலகப்போர் இந்தக் காரணத்தால் உலகம் அழியும் என்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய விடயமே. உலகில் அதிகார வர்க்கத்திடையே போர் ஏற்படுமாயின் தற்போது உள்ள ஆயுதங்கள் உலகை அழிக்குமோ இல்லையோ பூமியை மனிதர்கள் வாழத்தகுதியற்றதாக மாற்றிவிடும் என்பது உண்மை.
தற்போதைய உலக நகர்வின் படி மூன்றாம் உலகப்போர் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்பதை சமகால உலக நடப்புகள் தெளிவு படுத்துகின்றன என்பதையும் ஒரு தடவை நினைவு படுத்திவிடலாம். மொத்தமாக பார்க்கும் போது எப்போதாவது உலகம் அழிவடையும் அதற்கு முன்கூட்டியே மனித குலத்தை தயார் படுத்தும் நோக்கத்திலேயே அடிக்கடி உலகஅழிவுக்கதைகள் உருவாகின்றது என்றும் எடுத்துக்கொள்ளலாம்.