Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ட்ரம்பிற்காக இனியும் சேவையாற்ற முடியாது: பதவி விலகிய தூதுவர்

In உலகம்
Updated: 06:27 GMT, Jan 13, 2018 | Published: 06:27 GMT, Jan 13, 2018 |
0 Comments
1347
This post was written by : Risha

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக இதற்கு மேலும் சேவையாற்ற முடியாது எனத் தெரிவித்து பனாமாவிற்கான அமெரிக்க தூவர் ஜோன் ஃபீலே, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

சர்வதேசத்தை சீற்றமடைய செய்த ஆபிரிக்க குடியேற்றவாசிகள் தொடர்பான ட்ரம்பின் அவதூறு கருத்தை தொடர்ந்தே இவர் தனது ராஜினாவை அறிவித்துள்ளார்.

அமெரிக்க அரச திணைக்களத்திற்கு இவர் தனது ராஜினா கடிதத்தை நேற்று (வெள்ளிக்கிழமை) அனுப்பி வைத்துள்ளார். தனது பதவி விலகலுக்காக அவர் தனிப்பட்ட காரணங்களை சுட்டிக்காட்டியுள்ள நிலையில், அவரது ராஜினாமாவை ஏற்பதாக அரச திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய ஜோன் ஃபீலே, பனாமாவிற்கான அமெரிக்க தூவர் பதவியிலிருந்து எதிர்வரும் மார்ச் 9ஆம் திகதியுடன் பதவி விலகுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தனது பதவி விலகல் குறித்து அவர் தெரிவிக்கையில், ”எனது பதவியேற்பின்போது குறிப்பிட்ட சில கொள்கைகளுக்கு உடன்படாத போதிலும், ஜனாதிபதிக்கும், ஜனாதிபதியின் நிர்வாகத்திற்கும் உண்மையாக சேவை செய்வேன் என்று உறுதிமொழி ஏற்றேன். ஆனால் இந்த உறுதிமொழியை தொடர்ந்தும் என்னால் காப்பாற்ற முடியாத நிலையில் பதவி விலகுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg