Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ட்ரம்பின் பிரித்தானிய விஜயம் ரத்து: லண்டன் மக்கள் வரவேற்பு

In
Updated: 07:04 GMT, Jan 13, 2018 | Published: 07:04 GMT, Jan 13, 2018 |
0 Comments
1228
This post was written by : Risha

லண்டனுக்கான விஜயத்தை ரத்து செய்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பை, லண்டன் மக்கள் வரவேற்றுள்ளனர்.

லண்டனில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அமெரிக்க தூதரகத்தை திறந்து வைக்கும் வகையிலேயே ட்ரம்பின் லண்டன் விஜயம் அமையவிருந்தது.

இந்நிலையில், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நிர்வாகத்தில் மேற்கொள்ளப்பட்ட உடன்பாட்டின் பிரகாரம் தெற்கு லண்டனில் தூதரம் திறக்கப்படுவது தொடர்பாக தான் ஆர்வம் காட்டவில்லை எனத் தெரிவித்து, பயணத்தை ரத்து செய்வதாக நேற்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள லண்டன் மக்கள், ட்ரம்ப் லண்டனுக்கு வருவதை தாம் விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

ட்ரம்பை பயங்கரமானவர் மற்றும் இனவாதி என விமர்சித்த மக்கள், அவர் அடிப்படையில் மிக மோசமானவர் எனவே அவரிலிருந்து விலகியிருக்க தாம் விரும்புவதாக தெரிவித்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg