Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இப்போது கவிபாடும் நிலவு அப்போது இல்லை! – நிலவின் இறந்தகாலம் பற்றிய உண்மை

In அறிவியல்
Updated: 07:28 GMT, Jan 13, 2018 | Published: 06:42 GMT, Jan 13, 2018 |
0 Comments
1063
icon_com
This post was written by : Puvanes
moon001

குளிர்ச்சி, அழகு, வெண்மை என்ற பல்வேறு விதமான வர்ணனைகளுக்கும் கவிஞர்களின் உவமிப்பிற்கும் உரித்தானது இப்போதைய நிலவு. இந்த வார்த்தைகளில் உள்ள இப்போது என்பதை சற்றே அழுத்திக் கூறலாம்.

காரணம் அப்போது அதாவது 3.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் நிலவு இப்போது இருந்ததைப்போல் இருக்கவில்லை என்பது அண்மையில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள ஆச்சரியமான விடயமாகும்.

அதன்படி ஒருகாலத்தில் (4பில்லியன் வருடங்களுக்கு முன்னர்) நிலவு எரிமலைகளின் தீவிர செயல்திறன் தளமாகக் காணப்பட்டுள்ளது. அப்போது அவை உருகி நிலவின் மேற்பரப்பில் வாயுக்களை நிரப்பியுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர் நிலவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பினால் கார்பன் மொனாக்சைட் போன்ற வாயுக்கள் நிலவில் பரவி அங்கு நிலையில்லா தட்ப வெப்ப சூழ்நிலைகளை ஏற்படுத்தியுள்ளன. 3.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் நிலவு அடர்த்தியாகவும் கந்தகம் போன்ற கணிமங்களால் நிறைந்ததாகவும் காணப்பட்டுள்ளது.

அப்போது நிலவு இருண்டதாகவே காணப்பட்டுள்ளதாம். அதன் பின்னர் நிலவில் எரிமலைகளின் வெப்பம் அதிகரித்து ஏற்பட்ட வெடிப்பினால் உருகி பொங்கிய கனிமம் மீண்டும் குளிர்வடைந்த காரணத்தினாலேயே தற்போது நிலவில் உள்ள கடினமான பாறை போன்ற மேற்பரப்பு உருவாகியுள்ளது.

அதேபோல காற்று இல்லாத, பாறைகளாக தற்போது காணக்கிடைக்கும் நிலவு ஒருகாலத்தில் செவ்வாய்க்கிரகத்திற்கு ஒப்பானதாக காணப்பட்டுள்ளது. அதேபோன்று தற்போது பூமிக்கு தென்படும் நிலவைவிடவும் 3 மடங்கு பெரிய நிலவே பூமியில் இருந்து பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும்.

ஆனால் இதில் ஓர் திருத்தம் அதாவது இப்போது போன்று பிரகாசமாகவும், அழகாகவும் அப்போது நிலவு தென்பட்டிருக்காது. அதில் ஒளிப்பிரதிபளிப்பு இல்லாமல் இருண்டதோர் கிரகமாகவே நிலவு தென்பட்டிருக்கும்.

இதன்படி பார்த்தால் அப்போது நிலவிற்கு ஒப்பிட்டு கவிபாட கவிஞர்களால் சாத்தியமற்றதாய் போயிருக்கும், நிலாவைக் காட்டி மாதாக்கள் சோறூட்டவும் முடியாது போயிருக்கும். நிற்க அப்போது யார் பூமியில் வசித்தது என்று கேட்டுவிட வேண்டாம் இன்னொரு பதிவில் இதற்கான பதிலை எதிர்பார்த்திருங்கள்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)