நோட்டிங்ஹாம் ரயில் நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது!
In
Updated: 07:23 GMT, Jan 13, 2018 | Published: 07:23 GMT, Jan 13, 2018 |
0 Comments
1149
This post was written by : Risha

பாரிய தீ பரவலின் காரணமாக மூடப்பட்ட நோட்டிங்ஹாம் ரயில் நிலையம், மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
நோட்டிங்ஹாம் ரயில் நிலையத்திலுள்ள ஏழு ரயில் நிறுத்த மேடைகளில், ஐந்து நடை மேடைகளின் (Platform) பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட்டு அவை திறக்கப்பட்டு சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதான தேசிய ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
ரயில் சேவைகளை சாதாரண கால அட்டவணைக்கேற்ப இயக்க முடியும் என்று எதிர்பார்க்கின்ற போதிலும், சிலவேளைகளில் இடையூறுகள் நேரிடலாம் என்றும் ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நோட்டிங்ஹாம் ரயில் நிலையத்தில் நேற்று ஏற்பட்ட பாரிய தீ பரவலை 60 தீயணைப்பு படை அதிகாரிகள் போராடி கட்டுப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.