Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மர்ம உலகின் மறுபக்கம்! – நிழல் உலக சதியாளர்களும் மனித குலமும்…

In அறிவியல்
Updated: 07:27 GMT, Jan 13, 2018 | Published: 07:14 GMT, Jan 13, 2018 |
0 Comments
1269
This post was written by : Puvanes

அனைத்தும் படைத்தவன் திட்டப்படி நடக்கின்றது என்பது ஆன்மீகவாதிகளின் கருத்து, ஆனால் மனிதர்கள் திட்டமிட்டு அடிமைப்படுத்தப்பட்டு வருகின்றார்கள். எதிர்காலத்தில் உலகம் ஒற்றைஆட்சிக்கு கீழ் கொண்டுவர திட்டமிடப்படுகின்றது.

இந்த விடயத்தினை நம்பமுடியாமல் இருக்கலாம், அல்லது இது எப்படி சாத்தியம் என்ற பல கேள்விகள் உருவாகலாம் வழமைப்போலவே இதுவும் ஓர் புரளிக்கதை என்ற பார்வையும் கூட ஏற்பட்டுவிடலாம்.

எனினும் இந்தத் திட்டம் தற்போது மறைமுகமாக அரங்கேற்றப்பட்டு வருகின்றது என்பதே மேலைத்தேய ஊடகங்களின் அன்றாடச் செய்திகள். இல்லுமினேட்டி (Illuminati) என்பதுவே உலகை ஆள திட்டமிட்டு வருகின்றனர் என பலவருடங்களாக நம்பப்பட்டு வருவதோடு ஆய்வுகளும் இடம்பெற்று வருகின்றன.

இந்தவிடயத்தினைப் பற்றி அறிந்தும் கேட்டும் இருக்கலாம் எனினும் அறியப்படாத பல விடயங்களையும், இந்த மர்மக்குழுமத்தின் திட்டம் என்ன என்பதையும் விரிவாகப் பார்க்கலாம்.

அதற்கு முன்னர், ஐக்கிய அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியில் கொலராவில் உள்ள டென்வர் என்ற ஓர் சர்வதேச விமான நிலையத்தினைப் பற்றி கூறியாகவேண்டும்.

விமானநிலையம் எனப்படும் போது அது மனதுக்கு இதம்தரப்படும் வகையில் அமைக்கப்படவேண்டும் என்பதே அனைவரதும் எண்ணம். ஆனாலும் கொலராவில் உள்ள இந்த விமான நிலையமோ அதற்கு முற்றிலும் மாறுபட்ட வகையில் இங்கு வருகைத்தரும் பயணிகளுக்கு மரணபயத்தை விதைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

சாத்தான்களும், கல்லறைகளும், ஆயுதங்களும், சவப்பெட்டிகளும் இங்கு சிலைகளாகவும் சித்திரங்களாகவும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விமான நிலையம் உலகத்தை ஓர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் திட்டமிடும் இல்லுமினேட்டி அமைப்பினருக்குரியது என்பது இல்லுமினேட்டி தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுள்ளவர்களின் கருத்து.

குறிப்பாக இந்த விமான நிலையத்தின் அடிக்கல் புதுஉலக விமான நிலையம் எனவும், இல்லுமினேட்டி குழுமத்தின் சின்னத்தையும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாகவே அமைகின்றது. விமான நிலையத்திற்கு வருகின்றவர்கள் அனைவரும் ஏதோ சாத்தானின் உலகத்திற்குள் வந்து விட்டதான தோற்றத்தை ஏற்படுத்துகின்றது இந்த டென்வர் விமான நிலையம். இந்த அறிமுகத்தோடு இல்லுமினேட்டி குழுமத்தை பற்றிய மர்மங்களுக்குள் செல்லலாம்.

தற்போது திரைப்படங்களும், ஆவணப்படங்களும் அதிக அளவில் இந்த இல்லுமினேட்டி என்ற மர்மக் குழுமத்தினைப்பற்றி மக்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தெளிவுபடுத்த முயற்சிகள் மேற்கொண்டுள்ளன.

உலகின் புதிய கட்டளை எனப்படும் பெயரால் அறியப்படுகின்றது இந்த மர்மக்குழு. எனினும் இது புது உலக கட்டளை அல்ல நீண்டகாலமாக திட்டமிட்டு எதிர்காலத்தில் அடைய வேண்டிய இலக்கே இந்த புது உலக கட்டளை.

இந்த மர்மக்குழு இல்லுமினேட்டி என்று அடையாளப்படுத்தப்படுகின்றது. இவர்களின் திட்டம் உலகம் முழுவதும் ஓர் குடையின் கீழ் கொண்டுவரப்படவேண்டும் என்பதே. உலகத்தில் நடந்த அல்லது நடக்கின்ற, நடக்கப்போகும் யுத்தங்கள் அனைத்தும் இவர்களால் திட்டமிடப்படுகின்றது. அரசியல் மாற்றங்கள் கூட எங்கோ ஓர் மூளையில் இருந்து இவர்கள் திட்டமிடுகின்றார்கள் என்பது வியப்பை ஏற்படுத்துகின்றது.

உலகில் 13 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் திட்டமிண்டு நூற்றாண்டு காலமாக திட்டமிட்டு செயற்படுத்தப்படுவதே இந்த ஒற்றை உலக கோட்பாடு. தற்போது உலகின் பல்வேறு இடங்களிலும் பல நிழல் மனிதர்கள் கொண்டு இவர்களின் சதிகள் நிறைவேற்றப்பட்டு கொண்டே இருக்கின்றது என்பது நம்பவும் முடியாத உண்மை.

இவர்களின் பிரதான நோக்கம் உலகம் அனைத்தையும் கட்டுப்படுத்தி வைப்பதும், இயக்குவதும். இவர்களுக்கு அடங்கி நடப்பவர்கள் உலகில் வாழத் தகுதிபெற்றவர்கள் மாறாக எதிர்ப்பவர்கள் அல்லது கிளர்ச்சிகளை ஏற்படுத்துகின்றவர்கள் உலகத்தில் இருந்து அகற்றப்படுவார்கள்.

ஒற்றைக்கண் என்பது இவர்களின் சின்னம் அத்தோடு 13 என்பது இவர்களின் இலக்கம். இவர்கள் திட்டமிட்டு செய்த கொலைகள், நடத்திய யுத்தங்கள், இவர்களால் கொல்லப்பட்ட அரச தலைவர்கள், தொழில் நுட்பத்திற்கும் உலகில் பரப்பப்படும் வதந்திகளுக்கும் இவர்களுக்கும் உள்ள தொடர்பு போன்ற பல்வேறு விடயங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ஒற்றைக் கண் நிழல் உலகத்தின் பயணம் தொடரும்…

denver001 denver002 denver003 denver004 denver005

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg