Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென் ஆபிரிக்காவை பழிவாங்க சச்சின் ஆலோசனை

In கிாிக்கட்
Updated: 07:36 GMT, Jan 13, 2018 | Published: 07:36 GMT, Jan 13, 2018 |
0 Comments
1398
This post was written by : Elakkiya

கேப்டவுனில் நடைபெற்ற தென் ஆபிரிக்க அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவதற்கான ஒருசில ஆலோசனைகளை அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் வழங்கியுள்ளார்.

இந்தியா மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (சனிக்கிழமை) செஞ்கூரியனில் ஆரம்பமாகவுள்ளது. இப்போட்டியில் கேப்டவுன் தோல்விக்கு இந்திய அணி பதிலடி கொடுக்க வேண்டும் என்று கூறும் சச்சின், அதற்கான சில ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.

அதன்படி துடுப்பாட்ட வீரர்கள் முதல் 25 ஓவர்களுக்கு கவனம் செலுத்த வேண்டும் என்றும் 50 ஓவர்களுக்கு பின்னர் துரிதப்படுத்த வேண்டும் என்றும் பந்து வீச்சாளர்கள் சரியான இடங்களில் பந்து வீச வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன், முக்கியமான விடயம் வீரர்கள் ஒரு அணியாக நேர்மறையாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “கேப்டவுன் தோல்வியால் வீரர்களின் மனநிலை சோர்வடைந்திருக்காது என்று நான் நம்புகின்றேன். ஆனாலும் இன்றைய போட்டி சவாலாகவே அமையும். எனவே தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளும் போது துடுப்பாட்ட வீரர்களுக்கு விராட் கோஹ்லி ஊக்கமளிக்க வேண்டும்”  என்றும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg