Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானிய- அமெரிக்க உறவு குறித்து ஜோன்சன் எச்சரிக்கை

In
Updated: 07:37 GMT, Jan 13, 2018 | Published: 07:37 GMT, Jan 13, 2018 |
0 Comments
1207
This post was written by : Risha

பிரித்தானியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு ஆபத்தில் இருப்பதாக பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் பொரிஸ் ஜோன்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

லண்டனுக்கான விஜயத்தை ரத்து செய்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்தே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பயண ரத்து குறித்த தீர்மானமானது, பிரித்தானியாவில் ட்ரம்பிற்கு எதிரான வலுவான பொது மற்றும் அரசியல் எதிர்ப்பை தூண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன், ட்ரம்பின் பிரித்தானிய விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த லண்டன் மேயர் சாதிக் கான் மற்றும் தொழிற்கட்சி தலைவர் ஜெரமி கோர்பின் ஆகியோரையும் ஜோன்சன் விமர்சித்துள்ளார்.

ட்ரம்பின் திட்டமிடப்பட்ட லண்டன் விஜயம் ரத்து செய்யப்பட்டமை மகிழ்ச்சியளிப்பதாக லண்டன் மேயர் சாதிக் கான் தனது டுவிட்டரில் பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg