Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மெல்பேர்ன் ஒருநாள் போட்டி- ஜோ ரூட் விளையாடுவார், வோர்னர் விளையாடுவது சந்தேகம்

In கிாிக்கட்
Published: 08:00 GMT, Jan 13, 2018 |
0 Comments
1114
This post was written by : Elakkiya
joe-root-afp_806x605_71515822676

அவுஸ்ரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள முதலாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் விளையாடுவார் என்று கூறப்படுகின்றது. அதேவேளை அவுஸ்ரேலிய அணி வீரர் டேவிட் வோர்னர் பங்கேற்பது சந்தேகம் என்றும் தெரியவருகின்றது.

இவ்விரு அணிகளுக்கும் இடையில் அண்மையில் நடைபெற்று முடிந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரின் ஐந்தாவது போட்டியின் போது வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஜோ ரூட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்தார்.

இந்நிலையில் தற்போது அவர் உடல்நலம் தேறியுள்ளதாகவும் மெல்பேர்னில் நாளை நடைபெறவுள்ள முதலாவது ஒருநாள் போட்டியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக அவர் களமிறங்குவார் என்றும் இங்கிலாந்து அணித்தலைவர் இயன் மோர்கன் நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறிருக்க அவுஸ்ரேலிய துணைத் தலைவர் டேவிட் வோர்னர் நாளைய போட்டியில் பங்கேற்பது சந்தேகம் என்று கூறப்படுகின்றது. வயிற்றுவலி காரணமாக இன்று நடைபெற்ற வலைப்பயிற்சியில் அவர் பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் நாளை அவர் குணமாகிவிடுவார் என அவுஸ்ரேலிய அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)