Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குர்ஆனின் பார்வையில் சபிக்கப்பட்டவர்கள் யார்?

In ஆன்மீகம்
Published: 08:07 GMT, Jan 13, 2018 |
0 Comments
1079
This post was written by : Puvanes
quran001

குர்ஆன் மனித வாழ்விற்கான அழகிய வழிகாட்டல் அது போதிப்பதை சாத்தியப்படுத்தும்போது வாழ்வு வளம்பெறும் என்பது நிச்சயம்.

இறைவனின் சாபத்திற்குரிய காரியங்களைத் தெரிந்து அவற்றிலிருந்து விலகியிருப்பது முஸ்லிம்கள் அனைவர் மீதும் கட்டாயமாகும். குர்ஆன் பார்வையில் சாபத்திற்குரியவா்கள் என நோக்கப்படுகின்றவர்கள்

1. இணை வைத்தல் மற்றும் அதனைச் சார்ந்த செயல்களைச் செய்பவர்கள்.
2. விதியைப் பொய்ப்பிக்கக் கூடியவர்கள்
3. புனித பூமிகளான மக்கா, மதீனா போன்ற இடங்களில் கலகம் செய்பவனுக்கும், அனாச் சாரங்கள் செய்பவனுக்கும் அடைக்கலம் தருபவர்கள்.
4. மக்கள் நடமாடும் பாதை போன்ற பொது இடங்களை அசுத்தப்படுத்துபவர்கள்.
5. மார்க்கக் கடமைகளைத் தட்டிக் கழிக்கத் தந்திரங்களைக் கையாள்பவர்கள்.
6. பிராணிகளின் அங்கங்களைச் சிதைப்பவர்கள்.
7. ஆண்களைப் போல் நடக்கும் பெண்கள், பெண்களைப் போல் நடக்கும் ஆண்கள்.
8. இறைவனின் இயல்பான படைப்பில் மாற்றம் செய்பவர்கள்.
9. பிறர் செல்வத்தை அபகரிப்பவர்கள்.
10. உலகப் பேராசை
11. நபி தோழர்களை விமர்சிப்பவர்கள்.
12. அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்பவர்கள்.
13. கணவனின் கடமைகளை நிறைவேற்றத் தவறும் மனைவி.
14. மண்ணறைகளுக்குச் செல்லும் பெண்கள், ஒப்பாரி வைத்து அழும் பெண்கள்.
15. மது அருந்துபவர்களும், அதை ஆதரிப்பவர்க ளும், அதற்குத் துணை நிற்பவர்களும்.

இத்தகைய குணம் படைத்தவர்களை குர்ஆன் சாபத்திற்குரியவர்களாக கூறுகின்றது. நம்மிடையேயும் இவ்வாறானவர்கள் இருக்கின்றார்களா? புனித குர்ஆனை மதியாதோர் இருக்கின்றார்களா? மார்க்கத்தில் இருந்து விடுபவர்களை என்னென்று கூறுவது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)