Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்களுக்கு “முதல்வர் பதக்கம்“

In இந்தியா
Updated: 10:33 GMT, Jan 13, 2018 | Published: 10:33 GMT, Jan 13, 2018 |
0 Comments
1150
This post was written by : Arul Jesu

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு 1686 காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்களுக்கு ‘முதல்வர் பதக்கம்’ வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு காவல்துறைப் பணியாளர்கள் 1500 பேருக்கு ‘முதல்வர் பதக்கம்’ வழங்க உத்தரவிட்டுள்ளளதாக தமிழக அரசு இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டள்ளது.

அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘காவல் துறையில் காவலர் மற்றும் தலைமைக் காவலர் நிலைகளில் பணியாற்றுகின்ற 1500 பணியாளர்களுக்கும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்ந்த 120 அலுவலர்களுக்கும், சிறைத் துறை சார்ந்த அலுவலர்கள் 60 பேருக்கும் ‘தமிழக முதலமைச்சரின் சிறப்பு பணிப் பதக்கங்கள்’ வழங்கப்படும்.

இவர்கள் அனைவருக்கும் காவல்துறை தலைமை அதிகாரி, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை தலைமை அதிகாரி, மற்றும் சிறைத்துறை தலைவர் ஆகியோரால் மாவட்டத் தலைநகரங்களில், பின்னர் நடைபெறும் அரசு விழாக்களில் குறித்த பதக்கங்கள் வழங்கப்படும்.

மற்றும் காவல் வானொலி பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள், நாய்படைப் பிரிவில் பணி யாற்றும் அதிகாரிகள் மற்றும் காவல் புகைப்படக் கலைஞர்கள் என ஒவ்வொரு பிரிவிலும் 2 அதிகாரிகள் வீதம் 6 அதிகாரிகளுக்கு அவர்களது தொழிற் சிறப்பு மற்றும் மாசற்ற பணியை அங்கீகரிக்கும் வகையில் தமிழக முதல்மைச்சரின் ‘காவல் தொழில்நுட்பச் சிறப்புப் பணிப் பதக்கம்’ வழங்கப்படும். அத்துடன் பணத்தொகையும் பரிசாக வழங்கப்படும். இதற்காக நடைபெறும் சிறப்பு விழாவில் குறித்த பதக்கங்கள் வழங்கப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg