Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘இந்திராகாந்தி’ படம் இன்னும் உறுதியாகவில்லை: வித்யா பாலன்

In சினிமா
Updated: 08:47 GMT, Jan 13, 2018 | Published: 08:47 GMT, Jan 13, 2018 |
0 Comments
1114
This post was written by : Ravivarman

‘இந்திரா’ எனும் புத்தகத்தை மையமாக வைத்து படம் தயாரிப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என நடிகை வித்யா பாலன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமரான இந்திராகாந்தியின் வாழ்க்கை வரலாறு படத்தில் வித்யா பாலன் நடிப்பதாக வெளியான தகவல் குறித்து ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எழுத்தாளர் சகாரியா கோஷ் இந்திரா காந்தியை மையமாக வைத்து ‘இந்திரா இந்தியாவின் மோஸ்ட் பவர்புல் பிரைம் மினிஸ்டர்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தின் உரிமையை நான் வாங்கியுள்ளேன்.

‘இந்திரா’ புத்தகத்தின் உரிமையை வாங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்திராவாக நடிக்க நான் எப்போதும் விரும்பியது உண்டு.

இந்த புத்தகத்தை மையமாக வைத்து படம் தயாரிக்கலாமா? அல்லது வெப்சீரியல் தயாரிக்கலாமா என்று இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் இரண்டில் ஒன்று நடக்கும்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg