Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடகொரியா மீது அழுத்தங்களை அதிகரிக்க ஜப்பான்- எஸ்தோனியா இணக்கம்

In உலகம்
Updated: 08:49 GMT, Jan 13, 2018 | Published: 08:49 GMT, Jan 13, 2018 |
0 Comments
1110
This post was written by : Risha
es

வடகொரியாவின் மீது அழுத்தங்களை அதிகரிக்க ஜப்பானும், எஸ்தோனியாவும் இணங்கியுள்ளதாக ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.

எஸ்தோனிய பிரதமருடனான சந்திப்பை தொடர்ந்து நேற்று (வெள்ளிக்கிழமை) கூட்டாக ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த ஜப்பான் பிரதமர், ”வடகொரியாவின் அணு ஆயுதங்களை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதேவேளை, வடகொரியா மீது அழுத்தங்களை பிரயோகிப்பது அவசியமாகும்” என்றார்.

ஜப்பானும், எஸ்தோனியாவும் பல கிலோமீற்றர்களால் பிரிக்கப்பட்டுள்ள போதிலும், ஒரு வலுவான டிஜி;ட்டல் தொழில்நுட்பம் மூலம் இணைக்கப்பட்டுள்ளோம் என எஸ்தோனிய பிரதமர் குறிப்பிட்டார்.

ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே, ஆறு ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை ஆரம்பித்துள்ளார். சுற்றுப்பயணத்தின் முதல் விஜயமாக எஸ்தோனியாவிற்கா விஜயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)