Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இரண்டாவது டெஸ்ட்டிலும் ரஹானே இல்லை- புவனேஸ்வர் குமார் நீக்கம்

In கிாிக்கட்
Updated: 09:04 GMT, Jan 13, 2018 | Published: 09:04 GMT, Jan 13, 2018 |
0 Comments
1250
This post was written by : Elakkiya

தென் ஆபிரிக்க அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணியில் ரஹானே இடம்பெறவில்லை.

அதேவேளை கேப்டவுனில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் பிரகாசித்த புவனேஸ்வர் குமாரும் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்தியா மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் இன்று (சனிக்கிழமை) ஆரம்பமாகி நடைபெறுகின்றது.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற தென் ஆபிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாடி வருகின்றது.

இப்போட்டிக்கான இந்திய அணியில் லோகேஷ் ராகுல், முரளி விஜய், புஜாரா, கோஹ்லி, ரோஹித் ஷர்மா, ஹர்திக் பாண்ட்யா, பார்த்திவ் பட்டேல், அஸ்வின், மொஹமட் ஷமி, பூம்ரா மற்றும் இஷாந்த் ஷர்மா ஆகியோரே இடம்பிடித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg