Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘நாச்சியார்’ படக்குழுவின் பொங்கல் விருந்து!

In சினிமா
Published: 08:59 GMT, Jan 13, 2018 |
0 Comments
1119
icon_com
This post was written by : Ravivarman
C5vTJ67UYAAidDb

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் – ஜோதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நாச்சியார்’ படக்குழு இன்று (சனிக்கிழமை) டிரைலர் விருந்தளிக்க முடிவு செய்துள்ளது.

பி ஸ்டூடியோஸ் மூலம் பாலா தயாரித்து இயக்கியுள்ள ‘நாச்சியார்’ படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் ஜோதிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தை ராக்லைன் வெங்கடேஷ், காவ்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஜோதிகா இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் பொலிஸ் அதிகாரியாக வலம் வருகிறார். சமீபத்தில் வெளியான ‘நாச்சியார்’ படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துடன், சர்ச்சையிலும் சிக்கியது. டீசரின் முடிவில் ஜோதிகா பேசிய கெட்ட வார்த்தையால் டீசர் வைரலானது.

இந்நிலையிலேயே ‘நாச்சியார்’ படத்தின் டிரைலர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து படம் காதலர் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் பெப்ரவரி 9-ஆம் திகதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பதுடன், முன்னதாக இளையராஜா இசையில் பாடல்களும் விரைவில் வெளியாக இருக்கிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)