Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதிய கூட்டணிக்கு இடையிலான இணக்கப்பாடு வரவேற்கத்தக்கது: மக்ரோன்

In ஐரோப்பா
Updated: 08:59 GMT, Jan 13, 2018 | Published: 08:59 GMT, Jan 13, 2018 |
0 Comments
1120
This post was written by : Risha

புதிய கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதற்கான ஜேர்மன் அதிபர் அங்கேலா மெர்கலின் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியக் கட்சிக்கும் சமூக ஜனநாயக கட்சிக்கும் இடையிலான இணக்கப்பாட்டை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் வரவேற்றுள்ளார்.

ஒஸ்திரிய அதிபருடனான சந்திப்பை தொடர்ந்து நேற்று (வெள்ளிக்கிழமை) கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

புதிய கூட்டணி அமைப்பது தொடர்பாக கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியக் கட்சிக்கும் சமூக ஜனநாயக கட்சிக்கும் இடையே நேற்று இணக்கம் எட்டப்பட்டது. இதன்மூலம், ஐரோப்பாவில் பல மாதங்களாக நீடித்துவந்த அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜேர்மனியில் கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அதிபர் மெர்கலின் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியக் கட்சி போதியளவான பெரும்பான்மையைப் பெறாத நிலையில் கூட்டணி அரசாங்கத்தை உருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg