Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதிய கூட்டணி இணக்கப்பாடு ஐரோப்பாவிற்கு நன்மை பயக்கும்: ஜங்கர்

In ஐரோப்பா
Updated: 09:11 GMT, Jan 13, 2018 | Published: 09:09 GMT, Jan 13, 2018 |
0 Comments
1123
This post was written by : Risha

ஐரோப்பாவில் புதிய கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதற்காக எட்டப்பட்ட இணக்கப்பாட்டை வரவேற்ற ஐரோப்பிய ஆணைக்குழு தலைவர் ஜீன் க்ளோட் ஜங்கர், இது ஐரோப்பாவிற்கு பாரிய நன்மையளிப்பதாக அமையும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

பல்கேரிய தலைநகர் சோஃபியாவில், பல்கேரிய பிரதமருடன் நேற்று (வெள்ளிக்கிழமை) கூட்டாக ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மன் அதிபர் அங்கேலா மெர்கலின் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியக் கட்சிக்கும் சமூக ஜனநாயக கட்சிக்கும் இடையிலான இணக்கப்பாடானது, ஐரோப்பாவின் ஐரோப்பிய கொள்கை விவாதத்திற்கு குறிப்பிடத்தக்க நேர்மறையான, முன்னோக்குடைய பங்கு வகிக்கும் எனவும் குறிப்பிட்டார்.

ஜேர்மனியில் கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அதிபர் மெர்கலின் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியக் கட்சி போதியளவான பெரும்பான்மையைப் பெறாத நிலையில் கூட்டணி அரசாங்கத்தை உருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg