Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘பத்மாவத்’ படத்துக்கு உத்தரபிரதேசம் பச்சைக் கொடி!

In சினிமா
Published: 09:09 GMT, Jan 13, 2018 |
0 Comments
1090
This post was written by : Ravivarman
124112-pathamavathi-new

தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகி இருக்கும் வரலாற்று படமான ‘பத்மாவத்’ படத்துக்கு இந்தியாவில் உள்ள 3 மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் உத்தரப்பிரதேசத்தில் படத்தை வெளியீடு செய்ய அனுமதி கிடைத்துள்ளது.

ராஜஸ்தானின் சித்தூர் ராணி பத்மாவதியின் வரலாற்றைச் சித்தரிக்கும் பத்மாவதி படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் கடந்த டிசம்பர் 1-ந்திகதி வெளியாக இருந்த இப்படம் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து படத்தின் பெயர் ‘பத்மாவத்’ என்று மாற்றம் செய்யப்பட்டும், காட்சிகளில் மாற்றம் செய்தும் சென்சார் குழு அனுமதி வழங்கிய நிலையில் எதிர்வரும் 25-ந்திகதி பத்மாவத் படம் திரைக்கு வருகிறது.

பெயர் மாற்றம், காட்சிகளில் மாற்றம் செய்யப்பட்ட பின்பும் பத்மாவத் படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ராஜஸ்தான் மாநில அரசு இந்தப்படம் ராஜபுத்திரர்களின் மனம் புண்படும்படி இருப்பதால் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் பத்மாவத் படத்துக்கு தடை விதித்து இருப்பதாக தெரிவித்து உள்ளது. இதேபோல் குஜராத் மாநில அரசும் பத்மாவத் படத்துக்கு தடை விதித்துள்ளது.

இந்நிலையில், பத்மாவத் படத்தில் மாற்றங்கள் செய்து இருப்பதன் மூலம் உத்தர பிரதேசத்தில் படத்துக்கு எந்த தடையும் இல்லை என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)