Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியன் சூப்பர் லீக்- சென்னையின் எவ்.சி, புனே அணிகள் இன்று மோதல்

In உதைப்பந்தாட்டம்
Updated: 09:18 GMT, Jan 13, 2018 | Published: 09:18 GMT, Jan 13, 2018 |
0 Comments
1151
This post was written by : Elakkiya

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் இன்றைய லீக் போட்டியில் சென்னையின் எவ்.சி மற்றும் புனே சிற்றி அணிகள் மோதவுள்ளன.

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவரும் 4 ஆவது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் இதுவரை ஓன்பது போட்டிகளில் விளையாடியுள்ள சென்னையின் எவ்.சி. அணி 5 போட்டிகளில் வெற்றி, 2 போட்டிகளில் சமநிலை மற்றும் 2 போட்டிகளில் தோல்வி என 17 புள்ளிகளை பெற்று புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்திலுள்ளது.

அதேபோன்று 9 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி ஒரு போட்டியில் சமநிலை மற்றும் 3 போட்டிகளில் தோல்வி என 16 புள்ளிகளுடன் புனே அணி மூன்றாவது இடத்திலுள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரையான இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் ஏழு முறை மோதியுள்ளன. அவற்றில் சென்னை 5 போட்டிகளில் வெற்றிபெற்றது. இரண்டு போட்டிகள் சமநிலையடைந்தது. புனே அணி ஒரு போட்டியில் கூட வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg