தீபிகா படுகோனே – ரன்வீர் சிங் விரைவில் திருமணம்!

ரன்வீர்சிங்கும், தீபிகா படுகோனேவும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதுடன், இவர்களுக்கு இரகசிய நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
தீபிகா படுகோனேவுக்கும், இந்தி நடிகர் ரன்வீர் சிங்குக்கும் காதல் மலர்ந்துள்ள நிலையில், இருவரும் ஏற்கனவே பல படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர்.
தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ள பத்மாவத் படத்திலும் இணைந்து நடித்து இருக்கிறார்கள். இதில் தீபிகா படுகோனே சித்தூர் ராணி பத்மினியாகவும் அவர் மீது காதல்கொண்டு படையெடுத்து வரும் மன்னன் அலாவுதீன் கில்ஜியாக ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர்.
இந்த படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதால் ‘பத்மாவத்’ என்று பெயரை மாற்றியும், சர்ச்சை காட்சிகளை நீக்கியும் தணிக்கை குழு அனுமதி வழங்கி உள்ளது. இந்த மாத இறுதியில் படம் திரைக்கு வருகிறது. இந்த நிலையிலேயே தீபிகா படுகோனேவும், ரன்வீர் சிங்கும் விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தீபிகா படுகோனே தனது 32-வது பிறந்தநாளை மாலைதீவில் கொண்டாடினார். இதில் ரன்வீர் சிங்கும் அவரது பெற்றோருடன் கலந்து கொண்டார்.
அதன்போது இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாகவும், தீபிகா படுகோனேவுக்கு ரன்வீர் சிங் விலை உயர்ந்த மோதிரம் அணிவித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.