Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுப்பர்கம்பியூட்டர் ஆராய்ச்சிக்கு ஐரோப்பா ஒரு பில்லியன் முதலீடு

In ஐரோப்பா
Updated: 09:42 GMT, Jan 13, 2018 | Published: 09:42 GMT, Jan 13, 2018 |
0 Comments
1079
This post was written by : Risha
_99570484_043592226-1

உலகத் தரம் வாய்ந்த மீத்திறன் கணினிகளின் (சுப்பர்கம்பியூட்டர்) உருவாக்கத்திற்காக ஐரோப்பிய ஆணையம் ஒரு பில்லியன் யூரோக்களை செலவிட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

உயர் செயல்திறன் மிக்க கணினி திட்டங்களுக்கு ஐரோப்பாவின் பங்களிப்பு அவசியமானது எனவும் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த கணினிகளின் உருவாக்கத்திற்கு ஐரோப்பா செலவழிக்கும் பணமானது, ஒரு விநாடியில் பல பில்லியன் கணக்கீடுகளை மேற்கொள்ள உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் தற்போதுள்ள மீத்திறன் கணினியானது, தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ள மீத்திறன் கணினியைவிட ஆயிரம் மடங்கு மெதுவாகவே இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கணினிகளானது எதிர்கால தொழில்துறையை செழிப்பாக்குவதுடன், கார் உற்பத்தியாளர்களின் உற்பத்தியை துரிதப்படுத்தவும் உதவும் என ஐரோப்பிய ஆணையம் மேலும் தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)