Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆலயத்தை ஏன் வலம் வந்து வழிபட வேண்டும்! – வெறுமனே தேங்காய் உடைத்தால் அது தெய்வ வழிபாடா?

In ஆன்மீகம்
Updated: 09:22 GMT, Jan 13, 2018 | Published: 09:22 GMT, Jan 13, 2018 |
0 Comments
1359
This post was written by : Puvanes

மானிடப்பிறவிகளின் துயரினை தெய்வம் நிவர்த்தி செய்யும் என்பது நம்பிக்கை. தெய்வ வழிபாட்டில் ஆலயத்தினைச் சுற்றிவந்து வழிபடும் முறை பிரதானமான ஒன்றாகும்.

இந்துக்களைப் பொறுத்தவரைக்கும் ஆலயங்கள் தெய்வங்களின் வீடு. அதுமட்டுமல்ல பூமியின் காந்த அலைகள் அதிகம் காணப்படும் இடங்களில் பிரதானமானது ஆலயங்களே. அறிவியல் இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் தெய்வத்தின் இருப்பிடத்தில் சக்திகள் இருப்பது நியதியல்லவா.

ஆலயத்தின் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என அழைக்கபடும் இடத்திலேயே மூலவர் சிலை வீற்றிருக்கும். இந்த இடமே அந்த சுற்று வட்டாரத்திலேயே காந்த மற்றும் நேர்மறை அதிர்வுகள் அதிகம் காணப்படும் இடம்.

தெய்வ வழிபாட்டின் முழுப் பயனையும் அடைய நம் முன்னோர்களும் சித்தர்களும் கணக்கற்ற வழிமுறைகளை சொல்லிச்சென்றுள்ளார்கள். அவர்கள் கூறியவற்றைப் பின்பற்றும் போது ஆலயத்தின் ஒவ்வோர் அமைப்பையும் எம்மால் உணர்ந்துகொள்ள மட்டுமல்ல தெய்வ வழிபாட்டின் உச்சப்பயனையும் பெற்றுக்கொள்ளலாம்.

தெய்வமே நம் வாழ்வின் மையம், ஒரு வட்டத்தை மையப்புள்ளி இன்றி எவராலும் வரைய முடியாது. இது தெய்வத்திற்கு எடுத்துக்காட்டு அந்தவகையில் தெய்வம் எனும் மையத்தை சுற்றி, அதனை ஆதாரமாகக் கொண்டே நாம் இயங்குகின்றோம், இயக்கப்படுகின்றோம். என்பதை உணர்த்துவதற்காகவே ஆலயத்தை சுற்றி வலம் வந்து வழிபாடு செய்யப்படுகின்றது இது பிரதக்ஷிணம் என்ற வலம் வருதல் எனப்படும்.

தெய்வ மையத்தை சுற்றி வந்து வழிபடும் போது காந்த அதிர்வுகள் கூடுதலாக நம்முடன் இணைகின்றது. இதன்போது இறைவனுடன் நாம் கூடுதலாக நெருங்குகின்றோம் என்பதே உண்மை. இவ்வாறு மூன்று, ஐந்து, ஏழு அல்லது ஒன்பது என்ற எண்ணிக்கையில் வலம் வந்து வணங்கலாம்.

இதன்போது வேகமாக அல்லது எண்ணிக்கைக்காக, நாம் பக்தியில் சிறந்தவர் என மற்றவர்களுக்கு காட்டுவதற்காக ஆலயத்தினை வலம் வருவது எந்தப்பயனையும் தராது. மாறாக அமைதியுடன், நிதானமாக மனம் முழுவதும் தெய்வத்துடன் ஒன்றியிருக்கும் வகையில் வலம் வந்து வழிபடுதல் அவசியம்.

வெறும் எண்ணிக்கைக்காக ஓடி வந்து விட்டு நானும் சுற்றிவந்து வழிபட்டேன் என்ற ஏமாற்றுதல் நம்மைநாமே ஏமாற்றிக்கொள்ளும் செயலாகும். ஆலயத்தில் பிரகாரத்தை முழு மனதோடு சுற்றிவரும்போது ஆலயத்தின் அலைக்கதிர்கள் நேரடியாக நம்முடன் ஐக்கியமாகின்றன.

இதன்போது தூய எண்ணங்கள் மனதில் உதிக்கின்றன. தேவையற்றவை அகன்று அமைதி கிடைக்கின்றது. நேர்மறையாக செயற்படுவதற்கு இந்த வழிபாடு உதவுகின்றது. அதுமட்டுமல்லாது ஆலயத்தினை வலம் வந்து வழிபடுவதால் கர்ம வினைகள், முற்பிறவியில் செய்த பாவங்கள் அகன்றுவிடுவதாகவும் ஐதீகம் உள்ளது.

உண்மையான ஆலய வழிபாட்டை உணர்து செய்வது மட்டுமே பலன் தரும். அதனை விடுத்து ஆலயத்திற்கு சென்று திருநீறு தரித்து தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏந்துவதால் மட்டும் வழிபாட்டின் பயனை அடைந்துகொள்ளமுடியாது. சர்வமும் தெய்வமயம் என அறிந்து வழிபாடுகளை மேற்கொள்வது மனித வாழ்வை உய்விக்கும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg