Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிளிநொச்சியில் பதினொரு தேர்தல் விதிமுறை மீறல்கள்: தேர்தல் அலுவலகம்

In இலங்கை
Published: 09:34 GMT, Jan 13, 2018 |
0 Comments
1055
This post was written by : Vithushagan
images

உள்ளூராட்சி மன்றத் தோ்தல் விதிமுறை மீறல்கள் தொடர்பில் இதுவரை 11 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜ் தேர்தல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய மூன்று பிரதேச சபைகளுக்கும் ஒன்பது அரசியல் கட்சிகளும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் ஒரு சுயேட்சைக் குழுவும் போட்டியிடுகின்றன.

எனவே வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட பின்னர் இன்று வரையான காலத்தில் 11தேர்தல் விதிமுறை மீறல் சம்பவங்களே பதிவாகியுள்ளதோகவும், அதில் பிரமந்தனாறு பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்திற்குள் உள்நுழைந்து தாக்குவதற்கு முயற்சி செய்த சம்பவமே பெரிய தேர்தல் விதிமுறை மீறல் சம்பவமாக காணப்படுகிறது எனவும் மாவட்ட தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நாட்டின் ஏனைய பகுதிகளை விட வடக்கில் இந்த தேர்தலில் மிகமிக குறைந்தளவு தேர்தல் வன்முறைகளும்,விதிமுறை மீறல்களும் பதிவாகியுள்ளதாக கபே அமைப்பும் குறிப்பிட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)