Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.பி.எல். ஏலத்தில் 1122 வீரர்கள் பங்கேற்கின்றனர்!

In கிாிக்கட்
Updated: 09:49 GMT, Jan 13, 2018 | Published: 09:48 GMT, Jan 13, 2018 |
0 Comments
1295
This post was written by : Elakkiya
VIVO-IPL-2018

நடப்பாண்டின் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கட் தொடர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆரம்மாகவுள்ள நிலையில் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் பங்கேற்பதற்கு 1122 வீரர்கள் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

தொடருக்கான வீரர்கள் ஏலம் எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் ஐ.பி.எல் நிர்வாகம் ஏலத்தில் பங்கேற்கும் வீரர்கள் விபரத்தை இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ளது. அதன்படி வீரர்கள் ஏலத்தில் முதன்முறையாக இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டும் பங்கேற்கிறார்.

ஐ.பி.எல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், 281 நட்சத்திர வீரர்கள், 838 பிரபலமற்ற வீரர்கள் தமது பெயர்களை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 282 வெளிநாட்டு வீரர்கள் பெயர்களை பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பாக அவுஸ்ரேலிய வீரர்கள் 58 பேரும், தென் ஆபிரிக்க வீரர்கள் 57 பேரும், மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் மற்றும் இலங்கை வீரர்கள் தலா 3 பேரும் நியூஸிலாந்து வீரர்கள் 30 பேரும், இங்கிலாந்து வீரர்கள் 26 பேரும் தமது பெயர்களை பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அதுதவிர அமெரிக்க வீரர்கள் இருவரும் ஸ்கொட்லாந்து வீரர் ஒருவரும் இடம்பெற்றுள்ளனர்.

இம்முறை ஐ.பி.எல் ஏலத்தில், இந்திய வீரர்கள் யுவராஜ் சிங், கௌதம் கம்பீர், ரஹானே ஆகியோர் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை குல்தீப் யாதவ், கே.எல்.ராகுல், முரளி விஜய், ஹர்பஜன் சிங் ஆகியோர் மீதும் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)