Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் மரதன் ஓட்டப் போட்டி!

In இலங்கை
Updated: 10:03 GMT, Jan 13, 2018 | Published: 10:03 GMT, Jan 13, 2018 |
0 Comments
1163
This post was written by : Ravivarman

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் 2018 ஆம் ஆண்டிற்கான இல்ல விளையாட்டுப் போட்டியின் முதல் நிகழ்வான மரதன் ஓட்ட போட்டி இன்று (சனிக்கிழமை) காலை 6.30 மணியளவில் தலைமன்னார்-மன்னார் பிரதான வீதியில் ஆரம்பமானது.

பாடசாலையின் அதிபர் அருட்சகோதரர் றெஜினோல்ட் தலைமையில் இடம்பெற்ற குறித்த மரதன் ஓட்டப் போட்டியினை விருந்தினராக கலந்து கொண்ட மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்தியன் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி புதுக்குடியிருப்புச் சந்தியில் இருந்து குறித்த மரதன் ஓட்டப்போட்டி ஆரம்பமானது. குறித்த போட்டியில் சுமார்  500 மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது 1 ஆம் இடத்தை கிசோவன், 2 ஆம் இடத்தை யூட் கிரின்டிசன், 3 ஆம் இடத்தை டிபிசன் ஆகிய மாணவர்கள் பெற்றுக்கொண்டனர்.

மரதன் ஓட்ட போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் பாடசாலையின் பழைய மாணவர்கள்,பெற்றோர்,நலன் விரும்பிகள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு ஆதரவை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

20180113082347_IMG_1165 20180113075406_IMG_1146 20180113072235_IMG_1122 20180113072104_IMG_1119

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg