Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆந்திரா வங்கியின் முன்னாள் முகாமையாளர் கைது!

In இந்தியா
Published: 10:19 GMT, Jan 13, 2018 |
0 Comments
1044
This post was written by : Arul Jesu
BL01ANDHRA1_2263322g

ஐந்தாயிரம் கோடி ரூபாய் நிதி மோசடி வழக்கில் ஆந்திரா வங்கியின் முன்னாள் முகாமையாளர் அனுப் பிரகாஷ் கார்க், இன்று (சனிக்கிழமை) அமுலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குஜராத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று, ஆந்திரா வங்கியில் ஐந்தாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி ஏமாற்றியதாகக் குறிப்பிட்டு, கடந்த ஆண்டு டிசம்பரில் அமுலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.

குறித்த நிறுவனம், வாங்கிய கடனைக் குறிப்பிட்ட காலத்திற்குள் வட்டியுடன் செலுத்தவில்லை என்றும், இதற்கு உடந்தையாக ஆந்திரா வங்கி முன்னாள் முகாமையாளர் செயற்பட்டதாகவும் அமுலாக்கத்துறையினர் குறிப்பிட்டிருந்தனர்.

மேலும் அந்த வழக்கில் ஆந்திரா வங்கியின் முன்னாள் முகாமையாளர் அனுப் பிரகாஷ் கார்க் மற்றும் ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்தின் உரிமையாளர்கள் உள்ளிட்ட 7 பேர் மீதும் ரூ.5,383 கோடி ரூபா பணமோசடி செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இதன்படி, பண மோசடித் தடுப்புச்சட்டத்தின் கீழ் அனுப் பிரகாஷ் கார்க் இன்று அமுலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)