Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எமது தயவில் மீண்டும் ஜனாதிபதியாகும் நோக்கம்: ரவூப் ஹக்கீம்

In இலங்கை
Updated: 10:29 GMT, Jan 13, 2018 | Published: 10:29 GMT, Jan 13, 2018 |
0 Comments
1346
This post was written by : Ravivarman

தற்போதைய ஜனாதிபதி எமது தயவில் மீண்டும் ஜனாதிபதியாகின்ற நோக்கம் இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

உதவிக் கல்விப் பணிப்பாளர் இக்பால் ஆசிரியர் தலைமையில் நேற்று (வெள்ளிக்கிழமை) அக்கரைப்பற்றில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றம்போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் யானைச் சின்னத்தில் போட்டியிடுவது மாற்றுக் கட்சிக்காரர்களுக்கு பெரிய தர்மசங்கடமாக இருக்கிறது. வன்னியில் யானையில் போட்டியிடும் அமைச்சர் இங்குவந்து, முஸ்லிம் காங்கிரஸ் சின்னத்தை அடகு வைத்துவிட்டதாக புலம்புவதில் என்ன நியாயம் இருக்கிறது.

அவருக்கு வன்னியில் இருக்கின்ற அதே நியாயம்தான், இங்கு எங்களுக்கு இருக்கிறது என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும்

இன்னும் சில நாட்களில் ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திசாநாயக்க இந்த பகுதிக்கு வருவார். வட, கிழக்கை பிரித்தது யாரென்று அவர் சொல்வார். வட, கிழக்கு இணைப்பு தொடர்பான முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.

உண்மை நிலை தெரியாமல், தேசிய விவகாரங்களில் இவ்வாறு பேசித்திரிவது இவர்களின் அரசியல் வங்குரோத்து நிலையையே எடுத்துக் காட்டுகிறது.

வட-கிழக்கு என்பது தமிழர்களின் ஏகோபித்த முடிவாக இருக்கின்ற நிலையில், இதனை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரிப்பதாக கூறுகின்றனர். இந்த விவகாரத்தில் அன்றிருந்த அதே நிலைப்பாட்டில்தான் இன்றும் முஸ்லிம் காங்கிரஸ் இருந்துகொண்டிருக்கிறது.

பலவந்தமாக இணைக்கப்பட்ட வட-கிழக்கை நாங்கள் எதிர்த்தோம். வட-கிழக்கு தற்காலிக இணைப்புக்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தவேண்டுமென்ற நியதி இருந்தபோது, இதுகுறித்த எமது நிலைப்பாட்டை மறைந்த அஷ்ரஃப் காலத்திலிருந்தே சொல்லி வந்திருக்கிறோம்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியில் அவர் வைத்திருக்கின்ற நம்பிக்கை மூலம்தான் இவற்றைச் சாதிக்கவேண்டும். பத்தாயிரம் வாக்குகள் தேவையா, இல்லை ஒரு இலட்சம் வாக்குகள் தேவையா என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன சிந்திக்கவேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

IMG_1089 IMG_1069

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg