Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

14 ஆண்டுகளின் பின்னர் வெளிநாட்டு மண்ணில் கால்பதிக்கும் பார்த்தீவ் பட்டேல்

In கிாிக்கட்
Updated: 10:58 GMT, Jan 13, 2018 | Published: 10:58 GMT, Jan 13, 2018 |
0 Comments
1279
This post was written by : Elakkiya

இந்திய அணியின் விக்கெட் காப்பாளரும் பார்த்தீவ் பட்டேல் 14 ஆண்டுகளின் பின்னர் வெளிநாட்டு மண்ணில் இந்திய கிரிக்கட் அணியுடன் கால்பதித்துள்ளார்.

இந்தியா மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையில் இன்று ஆரம்பமாகியுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சகாவுக்கு பதிலாக பார்த்தீவ் பட்டேல் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற அவுஸ்ரேலிய அணியுடனான டெஸ்ட்டில் விளையாடிய பார்த்திவ் பட்டேலுக்கு 14 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் வெளிநாட்டு மண்ணில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

32 வயதான பார்த்திவ் பட்டேல், கடந்த 2002 ஆம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமாகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg