Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே தமிழ் மக்களின் சக்தி: கலையரசன்

In இலங்கை
Updated: 15:05 GMT, Jan 13, 2018 | Published: 11:08 GMT, Jan 13, 2018 |
0 Comments
1222
icon_com
This post was written by : Ravivarman
IMG_1614

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் தற்போது இருக்கும் ஒரே ஒரு சக்தி தமிழ்த் தேசியக்கூட்டமைப்பே என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், நாவிதன்வெளி பிரதேச சபையின் முதன்மை வேட்பாளருமான தவராசா கலையரசன் தெரிவித்தார்.

நாவிதன்வெளி பிரதேசபைக்கான தேர்தல் பரப்புரை பிரசாரக்கூட்டத்தில் மத்தியமுகாம் பிரதேசத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் தமிழ் மக்கள் பெரும் பலம் பொருந்தியவர்களாக காணப்பட்டார்கள். அவ்வாறான சந்தர்ப்பத்திலேதான் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தோற்றம் பெற்றது.

அவ்வாறு மக்களின் பலத்துடன் தோற்றம் பெற்ற தமிழ்த் தேசியக்கூட்டமைப்பானது தற்போது தமிழ் மக்களுடைய அடிப்படைப் பிரச்சனைகள் பற்றி தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் எடுத்தியம்பி அதற்கான தீர்வினை பெற்றுக்கொள்வதற்கு போராடி வருகின்றது.

அதனடிப்படையிலேதான் தற்போது நாம் சந்தித்திருக்கும் தேர்தலும் அமைந்திருக்கின்றது. உள்ளூராட்சி அதிகாரசபை என்பது வீதி அபிவிருத்தி, மக்களுக்கான சுத்தமான குடிநீர், பாதுகாப்பான சுகாதாரம், தெருவிளக்கு போடுதல், நோய்கள் வராமல் தடுத்தல் போன்ற மக்கள் நலன் சார்ந்த வேலைத்திட்டங்களை உள்ளடக்கியதாக உள்ளூராட்சி மன்றங்களின் நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றது.

இம்முறை நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலானது கலப்பு முறையிலான ஒரு புதிய தேர்தல் முறையாகும். இந்தத் தேர்தல் முறையில் குறைந்தது 25 வீதத்திற்கு மேல் பெண்களின் பிரதிநிதித்துவம் உள்ளடக்கப்பட வேண்டும் என்பது தேர்தலின் முக்கிய அம்சமாகும்.

அந்தவகையிலேதான் இம்முறை இந்தப் பிரதேசத்தில் இருந்தும் பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றார்கள். அவர்களுக்கும் உங்களுடைய ஆதரவினைத் தெரிவிக்க வேண்டிய கடப்பாடு இருக்கின்றது.

இம்முறை வேட்பாளர் தெரிவென்பது அனைவருடைய ஆதரவுடன்தான் நடைபெற்றது குறிப்பாக ஒவ்வொரு பிரதேசத்திற்கும் உடைய வேட்பாளர்களை அந்தந்த பகுதியில் இருக்கும் அமைப்புக்களும், பொதுமக்களும் இணைந்தே இறக்கியிருக்கின்றீர்கள்.

அவர்களது கரத்தினை பலப்படுத்த வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கின்றது” என தவராசா கலையரசன் மேலும் தெரிவித்தார்.

IMG_1608 IMG_1602

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)