Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்காவின் அச்சுறுத்தலை கவனத்தில் கொள்ள வேண்டும்: கிறிஸ்டியா ஃபிறீலான்ட்

In கனடா
Updated: 11:27 GMT, Jan 13, 2018 | Published: 11:24 GMT, Jan 13, 2018 |
0 Comments
1065
icon_com
This post was written by : Elakkiya
freeland

வட அமெரிக்க சுதந்திர வர்த்தக உடன்படிக்கையிலிருந்து விலகுவதற்கான அமெரிக்காவின் அச்சுறுத்தலை தீவிரமாக கவனத்தில் கொள்ள வேண்டும் என கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்ட் தெரிவித்துள்ளார்.

மேற்படி உடன்படிக்கையிலிருந்து வெளியேறுவதற்கு அமெரிக்கா விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த கிறிஸ்டியா ஃபிறீலான்ட், முத்தரப்பு உடன்படிக்கையை புதுப்பிப்பதற்கான ஆக்கபூர்வமாக ஆலோசனைகளை ஒட்டாவா தயாரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன்போது, அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு இடையில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையிலிருந்து விலகி நடக்க வேண்டும் என்று கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க நிர்வாகம் பலமுறை கூறியுள்ளது என்பதை சுட்டிக்காட்டிய ஃபிறீலான்ட், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது நாட்டுக்கு சாதகமான முறையில் குறித்த உடன்படிக்கை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், “பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே அமெரிக்கா ஒரு தெளிவான நிலைப்பாட்டில் இருந்துள்ளது. இது தொடர்பாக எமது அயல்நாட்டினருடன் நாம் பேசவேண்டும் என்று நினைக்கிறேன். இதனை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதுடன் அனைத்து சந்தர்ப்பத்திலும் கனடா தயாராகவே உள்ளது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)