Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சசிகலா தரப்பு கோரிக்கையை நிராகரித்தது விசாரணை ஆணையம்!

In இந்தியா
Published: 11:20 GMT, Jan 13, 2018 |
0 Comments
1143
This post was written by : Arul Jesu
VK Sasikala pays tribute to J Jayalalithaa

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அனைவரிடமும் குறுக்கு விசாரணை நடத்த வேண்டும் என சசிகலா தரப்பு விடுத்த கோரிக்கையை விசாரணை ஆணையம் இன்று (சனிக்கிழமை) நிராகரித்துள்ளது.

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் எழுப்பியவர்கள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த வைத்தியர்கள், உறவினர்கள் என இருபதுக்கும் மேற்பட்டோரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு விளக்கங்கள் பெறப்பட்டுள்ளன.

இதன் போது சசிகலா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் விசாரணை ஆணையத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

இதில் ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கில், சசிகலாவுக்கு எதிராக சாட்சியம் அளிப்போர் குறித்த பட்டியலை விசாரணை ஆணையம் வழங்க வேண்டும் எனவும், விசாரணை முடிந்ததும் சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்தவும் அனுமதி கோரப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே சசிகலா தரப்பு கோரிக்கையை விசாரணை ஆணையத்தின் தலைவரான நீதிபதி ஆறுமுகசாமி நிராகரித்துள்ளார்.

இதன்போது, அனைவரிடமும் விசாரித்த பிறகு கடைசியில் குறுக்கு விசாரணை நடத்தினால் வழக்கு முடிவதற்கு 15 ஆண்டுகள் ஆகும் என்றும், இனி வரும் நாட்களில் ஆணையத்திற்கு வருவோரிடம் வேண்டுமானால் குறுக்கு விசாரணை செய்துகொள்ளலாம் எனவும் சசிகலா தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதி ஆறுமுகசாமி பதில் அளித்துள்ளார்.

மேலும் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் மனு மீது ஜனவரி 22-ல் மீண்டும் விசாரணை நடைபெறும் என்றும் நீதிபதி  கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)