Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரான்ஸில் சிறைத்தண்டனை அனுபவித்த கனேடியர் விடுதலை

In கனடா
Updated: 11:47 GMT, Jan 13, 2018 | Published: 11:47 GMT, Jan 13, 2018 |
0 Comments
1047
This post was written by : Elakkiya
625.0.560.350.160.300.053.800.668.160.90

பிரான்ஸில் கடந்த 1980 ஆம் ஆண்டு இடம்பெற்ற குண்டுவெடிப்புடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த கனேடிய பேராசிரியரை விடுதலை செய்வதற்கு பிரான்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லெபனானை பூர்வீகமாக கொண்ட கனேடிய பேராசிரியரான ஹசன் டையப் மேற்படி குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடையதாக கடந்த 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு 2014 ஆம் ஆண்டு பிரான்ஸ் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அதன்படி மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த ஹசன் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதால் அவரை விடுதலை செய்யுமாறு பிரான்ஸ் நீதிமன்றம் நேற்று (வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டது.

இவ்வாறிருக்க நீதிமன்றின் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்யவுள்ளதாக பிரான்ஸ் வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர். அதேவேளை ஹசனை விடுவிக்கும் முடிவை வரவேற்பதாக கனேடிய சர்வதேச விவகாரத்துறை செய்தித்தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)