தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் அதிக முறைப்பாடுகள் !
This post was written by : Arul Jesu

நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலத்தில் இதுவரையில் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 418 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், தேர்தல் சட்டங்களை மீறிய 97 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் தேர்தல் பிரிவிற்குப் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தேர்தல் சட்டத்தை மீறயமை தொடர்பில் 397 முறைபாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இவற்றில் அதிக முறைப்பாடுகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.