Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முதலிடம் பிடித்த சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்!

In சினிமா
Updated: 14:06 GMT, Jan 13, 2018 | Published: 15:00 GMT, Jan 13, 2018 |
0 Comments
1616
This post was written by : Ravivarman
0a1e-10

சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் முதல் நாள் பொக்ஸ் ஆபிஸ் வசூலில் முதலிடம் பிடித்துள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தானா சேர்ந்த கூட்டம். 1987ஆம் ஆண்டு நடந்த ஒரு முக்கியமான சம்பவத்தை பின்னணியாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில், சூர்யா உட்பட அனைவரும் சி.பி.ஐ அதிகாரிகளாக நடித்து, பணக்காரர்களிடமிருந்து பணத்தைப் பறித்து, ஏழைகளுக்கு கொடுப்பது போல், காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பாலிவுட்டில் அக்ஷய் குமார் நடித்த ஸ்பெஷல் 26 படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள இப்படம் கிட்டத்தட்ட 70 சதவிகித திரையரங்குகளை பிடித்துள்ளது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம், தமிழகத்தில் ரூ.11.50 கோடி வசூல் படைத்துள்ளது.

அத்துடன், உலகளவில் ரூ.22 கோடி வசூல் படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தைத் தொடர்ந்து, சியான் விக்ரமின் ‘ஸ்கெட்ச்’ படம் தமிழகத்தில் மட்டும் ரூ.6 கோடி வசூல் படைத்துள்ளது.

உலகம் முழுவதும் வெளியான இப்படம் உலகளவில் ரூ.15 கோடி படைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிரபுதேவாவின் குலேபகாவலி தமிழகத்தில் ரூ.3.25 கோடி வசூல் படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாகியுள்ள டிஎஸ்கே, ஸ்கெட்ச் மற்றும் குலேபகாவலி ஆகிய படங்களில் பொக்ஸ் ஆபிஸ் வசூல் பட்டியலில் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் அதிக வசூல் படைத்து முதலிடம் பிடித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)