Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எழுச்சிப் பாடல்களைப் பயன்படுத்தியமைக்கு அவைத்தலைவர் கண்டனம்!

In இலங்கை
Updated: 15:05 GMT, Jan 13, 2018 | Published: 15:00 GMT, Jan 13, 2018 |
0 Comments
1416
This post was written by : Ravivarman

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் தமிழீழ எழுச்சிப் பாடல்களை ஒலிக்கவிட்டு தமது தேர்தல் பரப்புரையை முன்னெடுத்தமையை வண்மையாகக் கண்டிக்கின்றேன் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் இந்தச் செயற்பாடு குறித்து இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மேற்கண்டவாறு கூறினார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எந்தவொரு தொடர்பையும் கொண்டிராதவர்கள் இன்று அந்த அமைப்பின் வாரிசுகள் என்று சொந்தம் கொண்டாட முனைக்கின்றனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வில், தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழீழ எழுச்சிப் பாடல்களை ஒலிபெருக்கியது.

இது தமிழ், சிங்கள ஊடகங்களில் முக்கிய செய்தியாக வெளியாகியிருந்தது. ஒவ்வொருவருக்கும் தமது கருத்துக்களை வெளியிடுவதற்கு சுதந்திரமுண்டு. ஆனால் சுதந்திரக் கட்சியினருடைய இந்தச் செயற்பாடு அத்துமீறியதாக உள்ளது.

மக்கள் இதனைப் புரிந்துகொள்வார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் அவர்களுக்கு எதிராகச் செயற்பட்டவர்கள் இன்று அந்த அமைப்பின் பெயரைச் சொல்லி அரசியல் நடத்துவது தவறு.

ஆட்சி அதிகாரத்திலுள்ளவர்களின் இந்தச் செயற்பாடு அண்ணாந்து பார்த்துத் துப்புவதற்குச் சம்மானதாகும். கொள்கை வங்குரோத்து நடவடிக்கையே இது.

தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது. எமது மக்களுக்கு அரசியல் தெளிவில்லை எனச் சிலர் நினைக்கலாம். ஆனால் அன்னப்பறவைகள் போல் அனைத்தையுமே பகுத்தறியும் சக்தி எமது மக்களுக்கு உண்டு” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg