Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொலிஸாரின் பொங்கல் விழாவில் வேட்பாளர்கள்!

In இலங்கை
Updated: 15:40 GMT, Jan 13, 2018 | Published: 15:40 GMT, Jan 13, 2018 |
0 Comments
1299
This post was written by : Ravivarman

வவுனியா பிரதிப் பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தினால் இன்று (சனிக்கிழமை) பொங்கல் விழா கொண்டாடப்பட்ட போதிலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிலர் கலந்து கொண்டிருந்தமை தொடர்பாக அரசியல் கட்சிகள் விசனம் தெரிவித்துள்ளன.

வவுனியா பிரதிப் பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்தில் இன்று மாலை இடம்பெற்ற இவ் விழாவில் சிவில் சமூக அமைப்புகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது வவுனியா நகரசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கலந்து கொண்டிருந்ததுடன் பொங்கல் விழாவை முன்னின்று நடத்தியிருந்தனர்.

தேர்தல் நடைபெறும் நிலையில் பொலிஸாரே வேட்பாளர்களை அழைத்து இவ்வாறு பொங்கல்விழா நடத்தியமை தொடர்பாக அழைப்பு கிடைக்கப்பெறாத அரசியல் கட்சிகள் சில விசனம் தெரிவித்துள்ளன.

இந் நிலையில் இவ்விடயம் தொடர்பாக தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக தாம் முறையிடவுள்ளதாகவும் அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன.

aaaa

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg