Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெல்லவும் முடியாமல் வீழ்த்தவும் முடியாமல் தவிக்கிறது நல்லாட்சி!

In
Updated: 08:42 GMT, Jan 15, 2018 | Published: 16:05 GMT, Jan 13, 2018 |
0 Comments
1060
This post was written by : srikkanth

பல்வேறுபட்ட குழப்பநிலைகளுடன் அடுத்தது என்ன? என்ற எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் வகையிலேயே தற்போது தென்னிலங்கை அரசியல் நகர்ந்து வருகின்றது . அடுத்தகட்ட தேர்தல் உள்ளூராட்சி மன்றத் தேர்தலாக காணப்பட்டாலும் இது ஆட்சிமாற்றத்திற்கான தேர்தலாக விமர்சனங்களும், பிரச்சாரங்களும் சூடுபிடித்துள்ள நிலையே தொடர்கின்றது.

இதற்கான முக்கிய பங்களிப்பு, அதாவது உள்ளூராட்சிமன்றத் தேர்தல்ளை நாடாளுமன்ற அல்லது ஜனாதிபதித் தேர்தலைப்போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியமைக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தரப்பிற்கு பெரும் பங்களிப்பு உள்ளது.

எப்போதும்போல இப்போதும் ஆட்சி மாற்றப்படவேண்டும், அது எம்மால் சாத்தியம் என்று மஹிந்த அணியும். ஆட்சிமாற்றம் சாத்தியமே இல்லை என சமகால அரசாங்கத்தரப்பும் மாறிமாறி பிரச்சாரங்களை மேற்கொண்டுவருகின்றமை புளித்துப்போனவிடயமாகும்.

ஆனாலும் நடப்பு அரசியலை உற்றுப்பார்க்கும்போது, மஹிந்த மீண்டும் தனது அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் வெற்றிக்கான நகர்த்தல்களாக நகர்த்திக்கொண்டு வருவதனை அவதானிக்க முடியுமானதாகவே உள்ளது.

lanka c news

இந்த இடத்தில் மஹிந்தவின் ஆட்சி வீழ்ச்சியடைந்ததன் பின்னர் நல்லாட்சி அரசாங்கம் தோன்றிய பின் ஊழல்வாதிகளாகவும், நாட்டை கடன்சுமைக்குள் தள்ளி பாரிய பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தியவர்கள் – திருடர்கள் – கொலைகளுடன் தொடர்புபட்டவர்கள் என்ற பல்வகை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட மஹிந்த அணி கடந்தகாலத்தில் மக்கள் மத்தியில் வலுஇழந்து காணப்பட்டது.

எனினும் அதன்பின்னர் கடந்த வருட ஆரம்பத்தின் பின்னர் மீண்டும் ராஜபக்ஷர்கள் மக்கள் மத்தியில் மீண்டும் தமெக்கென இடத்தை பிடித்துவிட்டார்கள் என்றே புலப்படுகின்றது.

குறிப்பாக தென்னிலங்கை மக்களுக்கு யுத்தவெற்றி நாயகர்களாக ராஜபக்ஷர்கள் காணப்பட்டதே அவர்களின் மக்கள் ஆதரவிற்கு பிரதான காரணமாக அமைந்திருந்தது. எனினும் ஆட்சி மாற்றமடைந்தபின்னர் யுத்தம் என்ற பதம் தென்னிலங்கை மக்கள் மத்தியில் இருந்து சிறிது சிறிதாக அகற்றப்பட்டு வந்தது.

இதனால் ராஜபக்ஷர்களும் மக்கள்மத்தியில் இருந்த ஆதரவை சிறிது சிறிதாக இழந்து வந்தனர். எனினும் யுத்தம், அல்லது விடுதலைப்புலிகளை வைத்து பிரச்சாரம் செய்வதை மட்டும் அவர்கள் சற்றேனும் கைவிடவில்லை. “யுத்தத்தை நாமே வென்றோம்”,  “நாட்டை நாமே காப்பாற்றினோம்” என்ற வார்த்தைகளை மஹிந்த தரப்பை சேர்ந்த எவரும் ஆட்சிமாற்றத்தின் பின்னர் கைவிடவில்லை.

இதனூடாக மக்கள் மத்தியில் மீண்டும் தமக்கான ஆதரவை மஹிந்த அணி திரட்டிவிட்டார்கள் என்பதே உண்மை. தற்போதைய அரசியல் நிலைப்பாடுகளின்படி எதிர்வரும் தேர்தலில் மஹிந்தவின் வெற்றி பிரகாசமாகத் தெரிகின்றது என்றே கூறிவிடலாம்.

எனினும் அதற்கான முட்டுக்கட்டை சமகால அரசு தரப்பில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டு வருகின்றது. அதன் பிரதான காய் நகர்த்தலே மத்திய வங்கி ஊழல் தொடர்பில் வெளிச்சத்திற்கு கொண்டு வருவது. அதனை வெற்றிகரமாக செய்துவிட்ட அரசாங்கம், அடுத்து கடந்தகால ஊழலை அம்பலப்படுத்த திட்டங்களை வகுத்துள்ளது.

மத்திய வங்கி மோசடி வெளிச்சத்திற்கு வராமல் கடந்தகால ஊழல்களைப்பற்றி பேச அரசுக்கு சிறிதேனும் தகுதி இல்லை என்ற நிலையே காணப்பட்டது. அதில் இருந்து சாதூரியமாக தற்போது வெளிவந்துள்ள அரசு அடுத்து ராஜபக்ஷர்கள் கால ஊழல்களை மக்கள் மத்தியில் போட்டுடைக்க தீர்மானித்துள்ளது.

இதற்கு உதாரணமாக, ராஜபக்ஷர்களின் டுபாய் கணக்கு விபரங்கள் கிடைத்துவிட்டன, விமல் வீரவங்சவின் ஊழல் தொடர்பான விசாரணை என்று பல்வேறுவிடயங்களைக் காட்டலாம். ஆனாலும் இப்படியாக மஹிந்த தரப்பு மீதான கயிறு இறுக்கப்படுமாயின், அதில் இருந்து வெளிவரும் திட்டத்தினையும் ராஜபக்சர்கள் மேற்கொண்டு விட்டார்கள் என்பது மறைமுகமான தகவல்!.

மஹிந்த – கோட்டா – நாமல் போன்ற அனைவரும் மேடைகளிலும்சரி, ஊடகங்களிலும்சரி முன்வைக்கும் முக்கிய கருத்து “விடுதலைப்புலிகளுடனான போரை வெற்றி கொள்ள வைத்த இராணுவத்தினரை சர்வதேசத்திற்கு காட்டிக்கொடுக்க அரசு முயற்சி செய்கின்றது” என்பதே.

அண்மையில் வெளிநாட்டிலி ல் இருந்து கோட்டாபய உரையாற்றும் போதும், மஹிந்த பொதுஜன முன்னணியின் கூட்டத்தில் உரையாற்றும் போதும் இந்த வார்த்தைகளை பிரயோகிக்க தவறவில்லை என்பதை நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இதற்கு முக்கிய காரணம் இராணுவத்தினரை காப்பாற்றும் செயல் அல்ல, தன்னைத்தானே காத்துக்கொள்ளும் தற்காலிக செயற்பாடுகள் மட்டுமே.

அதாவது தற்போது மக்கள் மத்தியில் யுத்த வெற்றி நாயகர்களாக சித்தரித்துக்கொள்ளும் மஹிந்த தரப்பின் மீது, கைது அல்லது அவர்களது அரசியல் வாழ்விற்கு முட்டுக்கட்டை போன்ற நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளுமாயின் அதற்கு எதிராக மக்களை திருப்புவது மட்டுமே!

ஊழல்தொடர்பாக முறைகேடுகள் தொடர்பாக மஹிந்த தரப்பு மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் அது யுத்த வெற்றி நாயகர்கள் திட்டமிட்டு தண்டிக்கப்படப்போகின்றார்கள் என்ற கதைகளை மக்கள் மத்தியில் பரவச்செய்யும், தமக்கான எதிரலையாக விஸ்வரூபம் எடுத்துவிடும் என்ற தயக்கம் நல்லாட்சிக்கும் இருக்கின்றது.

அதனால் மஹிந்தவை வெல்லவும் முடியாது, ஒதுக்கவும் முடியாது, இணைத்துக்கொள்ளவும் முடியாத இக்கட்டான நிலையிலேயே தற்போதைய அரசாங்கம் செயற்பட்டுவருகின்றது என்பதே வெளிப்படை.

நன்றி: லங்கா சீ நியூஸ்

தமிழாக்கம்: புவனேஸ்

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg