Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குப்பைகளை எரியூட்டுவதற்கு மல்லாகம் நீதிமன்றம் தடையுத்தரவு!

In இலங்கை
Published: 16:15 GMT, Jan 13, 2018 |
0 Comments
1128
icon_com
This post was written by : Ravivarman

யாழ்.கல்லுண்டாய் பகுதியில் மலக்கழிவுகள் கொட்டவும், குப்பைகளை எரியூட்டுவதற்கும் மல்லாகம் நீதிமன்றம் இன்று (சனிக்கிழமை) தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

கல்லுண்டாய்ப் பகுதிகளில் குப்பைகள் கொட்டுவதனை எதிர்த்து மல்லாகம் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீதான விசாரணையின் போதே இன்று நீதிவான் அ.யூட்சன் மேற்படி தடையுத்தரவைப் பிறப்பித்தார்.

இது தொடர்பாக நீதிவான் தனது கட்டளையில் மேலும் குறிப்பிடுகையில்,

‘கல்லுண்டாய்ப் பகுதியில் உள்ள குப்பை மேட்டைச் சூழ மூன்று மாத கால பகுதிக்குள் வேலி அமைக்க வேண்டும். அப்பகுதிகளில் மலக் கழிவுகளை கொட்டுவதற்கும், குப்பைகளை எரியூட்டவும் தடை விதிக்கப்படுகின்றது.

மேலும் கொட்டப்படும் பிளாஸ்ரிக் கழிவுகள் உரிய முறையில் முகாமை செய்யப்பட வேண்டும். அத்துடன் கழிவு நீரையும் உரிய முறையில் முகாமை செய்ய வேண்டும்’ என மேலும் உத்தரவிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)