Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அனைவரது வாழ்க்கையிலும் எல்லா நலன்களும் பொங்க வேண்டும்: ஜனாதிபதி பொங்கல் வாழ்த்து

In இலங்கை
Updated: 02:38 GMT, Jan 14, 2018 | Published: 01:52 GMT, Jan 14, 2018 |
0 Comments
1107
This post was written by : Anojkiyan
maith

தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் கொண்டாடப்படும் தைத்திருநாள் அனைவரது வாழ்க்கையிலும் வளம், நலம், செழிப்பு, மகிழ்ச்சி உள்ளிட்ட எல்லா நலன்களும் பொங்கச்செய்ய வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் தைத்திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது மனங்கனிந்த இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தைத்திருநாளைக் கொண்டாடும் மக்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த வாழ்த்து செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“உலகவாழ் தமிழ் மக்களால் இயற்கைக்கு தமது நன்றியைப் பறைசாற்றும் வகையில் அனுஷ்டிக்கப்படும் தைத்திருநாளை முன்னிட்டு இந்த வாழ்த்துச்செய்தியை அனுப்பி வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். மானிட சமூகத்தினை நாகரிகத்தை நோக்கிப் பயணிக்க வைப்பதில் உழவுத் தொழிலே முக்கிய காரணியாக அமைந்தது.

நவீன கைத்தொழில் மயமாக்கத்தினதும் தொழில்நுட்ப வளர்ச்சியினதும் ஈர்ப்பினால் கிராமவாசிகள் விவசாயத்தைக் கைவிட்டு, நகரங்களை நோக்கி படையெடுக்கும் நிலையிலும் பண்டைய பாரம்பரியங்களுடன் கொண்டாடப்படும் இத்தகைய பண்டிகைகள் மனிதனின் கலாசாரம், பண்பாடு,மனிதநேயம், ஒற்றுமை, பகிர்ந்துண்ணல் மற்றும் உயிர்களிடத்தில் அன்பு செலுத்துதல் போன்ற விழுமியப்பண்புகளை சமூகத்தில் பேண உதவுவதுடன் அவற்றை எதிர்கால தலைமுறையினரை நல்வழிப்படுத்தும் வகையில் பாதுகாப்பதற்கும் வாய்ப்பாக அமைகின்றன.

அத்தோடு உழவுக்குப் பெருமை சேர்க்கும் தைத்திருநாளானது, உணவு உற்பத்தியைப் பெருக்கி, அதில் தன்னிறைவைப் பெறவேண்டும் என்ற அரசாங்கத்தின் முயற்சிக்கும் வலு சேர்ப்பதாகவே அமைகிறது.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் கொண்டாடப்படும் தைத்திருநாள் அனைவரது வாழ்க்கையிலும் வளம், நலம், செழிப்பு, மகிழ்ச்சி உள்ளிட்ட எல்லா நலன்களும் பொங்கச்செய்ய வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் தைத்திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது மனங்கனிந்த இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன்” என குறிப்பிடப்பட்டள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)