Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து விலகுவதாக ஹர்ஷ டி சில்வா தெரிவிப்பு?

In இலங்கை
Updated: 04:03 GMT, Jan 14, 2018 | Published: 02:20 GMT, Jan 14, 2018 |
0 Comments
1187
This post was written by : Anojkiyan

முறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாவிட்டால், ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து விலகுவதாக பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

கோட்டை பிரதேசத்தில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் யாரேனும் குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்டால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அவ்வாறில்லாமல் யாரேனும் பாதுகாக்கப்படுவார்களேயானால் ஐக்கிய தேசிய கட்சியில் அங்கம் வகிப்பதில் பயன் இல்லை. ஐக்கிய தேசிய கட்சி திருடர்களை பாதுகாக்கும் கட்சியாக செயற்படும் கட்சியல்ல” என தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg