Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆண்டாளைப் பெருமைப்படுத்துவதே எனது நோக்கம் – வைரமுத்து

In இந்தியா
Updated: 04:42 GMT, Jan 14, 2018 | Published: 04:39 GMT, Jan 14, 2018 |
0 Comments
1121
This post was written by : Arul Jesu
vairamuththu

ஆண்டாளைப் பெருமைப்படுத்துவதே தனது நோக்கம் என கவிஞர் வைரமுத்து நேற்று (சனிக்கிழமை)  வெளியிட்டுள்ள  அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இராஜபாளையத்தில் நடைபெற்ற ‘தமிழை ஆண்டாள்’ தொனிப்பொருளில்’ நடைபெற்ற விழாவொன்றில் ஆண்டாளைப் பற்றி கவிஞர் வைரமுத்து ஆற்றிய உரை பெரும் விமர்சனத்துக்குள்ளானது.

இதுதொடர்பில்  கவிஞர் வைரமுத்து வருத்தம் தெரிவித்துள்ள நிலையில் அவருக்கெதிராக  ஆர்ப்பாட்டங்களும் நடாத்தப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பில்  தனது டுவிட்டர் பக்கத்தில்  வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘தமிழை ஆண்டாள் என்ற கட்டுரையில் ஆராய்ச்சியாளர்களை மேற்கோள் காட்டிய ஒரு சொல் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. அருள்கூர்ந்து படித்தால் எனது கட்டுரை யாரையும் புண்படுத்தாது என்று விளங்கும்.

நான் ஆண்டாள் தமிழை வணங்குபவன், நாற்பத்தாறு ஆண்டுகளாக தமிழோடு வாழ்ந்து வரும் நான், என்னை உயர்த்திய தமிழ்ச் சமூகத்தைப் புண்படுத்துவேனா?, இதனைப் புரிந்துகொள்வேண்டும் என்பதே எல்லோருக்கும் எனது அன்பான வேண்டுகோள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Untitled

Vairamuththu

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)