Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆதவன் நேயர்கள் அனைவருக்கும் அன்பான தைப்பொங்கல் வாழ்த்துக்கள்!

In இலங்கை
Updated: 04:03 GMT, Jan 14, 2018 | Published: 04:03 GMT, Jan 14, 2018 |
0 Comments
1121
This post was written by : Risha

தைத்திருநாளாம் இன்றைய பொங்கல் திருநாள் உங்கள் வாழ்வில் அனைத்து விதமான செல்வத்தையும், என்றும் குறையாத அன்பையும் கொண்டுவரும் புதிய நாளாக அமைய வேண்டும் என ஆதவன் வாசகர்கள், ஆதவன் தொலைக்காட்சி ரசிகர்கள் அனைவருக்கும் ஆதவன் குழுமம் தனது தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது.

உழவர் திருநாளாம் தைத்திருநாள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உலகளாவிய ரீதியில் அனைத்து தமிழ் இந்து மக்களாலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

நன்றியை பறைசாற்றும் மனித மேன்மைக்கு எடுத்துக்காட்டான தைப்பொங்கல் திருநாள் இன்று மலர்ந்திருக்கிறது. இந்த தைப்பொங்கல் திருநாளில் உழவர்கள் தமது வேளான்மைக்கு உதவி செய்த சூரிய பகவானுக்கு நன்றி செலுத்துகின்றனர். இதற்காக அவர்கள் சூரியன் உதிக்கும் வேளையில் அவனுக்காக பொங்கலிட்டு தமது நன்றியை வெளிக்காட்டுக்கின்றனர். உழவர்கள் மாத்திரமல்லாமல் ஒவ்வொரு மனிதப்பிறவியும் சூரியனுக்கு நன்றி கூறும் நாளாக இன்றைய நாள் போற்றப்படுகிறது.

இவ்விழா சமயங்கள் கடந்து அனேக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது. நன்றி கூறும் திருவிழாவாக தைப்பொங்கல் அமைவதனால் அனைத்து மக்களிடத்திலும் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக தைப்பொங்கல் அமைந்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg