Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜனாதிபதியுடன் இணைந்தார் பொன்சேகா!

In இலங்கை
Updated: 05:19 GMT, Jan 14, 2018 | Published: 05:18 GMT, Jan 14, 2018 |
0 Comments
1218
This post was written by : Risha

தேசிய சுதந்திர முன்னணியின் களுத்துறை மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் பிரேமலால் பொன்சேகா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியை நேற்று (சனிக்கிழமை) நேரில் சந்தித்து அவர் தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.

இதன்போது, ஊழல் மோசடிகளை இல்லாதொழித்து தூய்மையான அரசியல் இலக்கொன்றை கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதியின் அர்ப்பணிப்பை பாராட்டிய அவர், ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு உயர்ந்தபட்ச ஆதரவினை வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் உறுதியளித்துள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணியின் பிரபல செயற்பாட்டாளரான அவர், அக்கட்சி உருவாக்கப்பட்டதன் பின்னர் களுத்துறை மாவட்டத்தில் முதலில் கட்சி உறுப்புரிமையை பெற்றுக்கொண்டவர்களுள் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg