Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஹவாய் மீது ஏவுகணைத் தாக்குதல்: தவறான தகவல்

In
Published: 04:13 GMT, Jan 14, 2018 |
0 Comments
1163
This post was written by : Suganthini

ஹவாய் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்படுமென்று வந்த தகவல் பொய்யென்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், தவறாகத் தகவல் பரவியமைக்காக அம்மாகாண ஆளுநர் டேவிட் இக் ( David Ige ) மன்னிப்புக் கோரியுள்ளார்.

ஊழியரொருவர் தவறாகப் பொத்தானை அழுத்தியதால், இந்தத் தகவல்  பரவியதாகவும்,  இதற்கு மன்னிப்புக் கோருவதாகவும்,  அவர் கூறியுள்ளார்.

ஹவாய் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்படுமென்று கையடக்கத் தொலைபேசிகள் வழியாக பொதுமக்கள் மத்தியில் நேற்று (சனிக்கிழமை) குறுந்தகவல் பரவியது. இதனையிட்டு பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

ஹவாய் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்படும் சாத்தியம் காணப்படுவதுடன், பொதுமக்களை பாதுகாப்பான இடம் நோக்கி நகருமாறும் அத்தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  இருப்பினும், இத்தகவல் பொய்யென்று பின்னர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உரிய விசாரணை நடத்துமாறு அமெரிக்க அரசாங்கம் பணித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)