Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தந்தை வழியிலேயே பிள்ளை! வேகத்தால் மிரட்டுவாரா நிட்டினியின் மகன்?

In கிாிக்கட்
Updated: 04:58 GMT, Jan 14, 2018 | Published: 04:58 GMT, Jan 14, 2018 |
0 Comments
1818
This post was written by : Anojkiyan

தென்னாபிரிக்க அணியில் கொடிகட்டி பறந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மக்காயா நிட்டினியின் மகன் அவரைப் போலவே வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்துள்ளார்.

17 வயதான இளம் வேகப்பந்து வீச்சாளர் தண்டோ நிட்டினி, தென்னாபிரிக்காவின் இளையோர் உலக கிண்ண அணியில் இம்முறை களமிறங்க காத்திருக்கின்றார்.

தென்னாபிரிக்க அணியின் பல வெற்றிகளுக்கு துணை நின்ற மக்காயா நிட்டினி போல், அவரும் தனது பங்களிப்பை அணிக்கு வழங்க வேண்டுமென இரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதே போன்று அவுஸ்ரேலியாவின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் வோவின் மகன் ஒஸ்டின் வோவும் அவுஸ்ரேலிய அணியில் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg