Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரையில் ஜல்லிக்கட்டு ஆரம்பம்!

In இந்தியா
Updated: 05:19 GMT, Jan 14, 2018 | Published: 05:19 GMT, Jan 14, 2018 |
0 Comments
1211
This post was written by : Arul Jesu

பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை, அவனியாபுரத்தில். இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.  வாடிவாசலில் இருந்து  காளைகளை அடக்கும் முயற்சியில் மாடுபிடி வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அந்தவகையில் மதுரை, அவனியாபுர ஜல்லிக்கட்டு முன்னேற்பாட்டு பணிகளை மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் விழா குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் அவனியாபுரத்தில் 675 வீரர்கள் பங்கேற்பதுடன் 954 காளைகளும் பங்கேற்கின்றன.

தமிழ் நாட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். ஆனால் மதுரை மாவட்டம், அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப் பிரசித்தி பெற்றவை.

அத்துடன் இன்று நடைபெறும் அவனியாபுர ஜல்லிக்கட்டைத் தொடர்ந்து பாலமேட்டில் 15ஆம் திகதியும். அலங்காநல்லூரில் 16ஆம் திகதியும் ஜல்லிக்கட்டு நடைபெறவிருக்கிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg