Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தோல்வி பயம் கொண்டவர்களே தாக்குதல் நடத்துகின்றனர்: வியாழேந்திரன்

In இலங்கை
Updated: 05:53 GMT, Jan 14, 2018 | Published: 05:53 GMT, Jan 14, 2018 |
0 Comments
1212
icon_com
This post was written by : Risha
IMG_9490

தோல்வி பயத்தில் இருப்பவர்களே எமது அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தி, நாசக்கார செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குபட்ட புதூர் பகுதியில் சேதமாக்கப்பட்ட கூட்டமைப்பின் அலுவலகத்தை நேரில் பார்வையிட்ட பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குபட்ட புதூர் பகுதியில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலகம் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் 20ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் இரா.அசோக் என்பவரின் அலுவலகம் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது அலுவலகத்தின் மேற்பகுதியில் இருந்த குறித்த வேட்பாளரின் பதாகை சேதப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

IMG_9492

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)