Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியா மீது அணுவாயுத தாக்குதலுக்கும் தயார்! – பாகிஸ்தான்

In இந்தியா
Updated: 06:10 GMT, Jan 14, 2018 | Published: 06:10 GMT, Jan 14, 2018 |
0 Comments
1206
This post was written by : Arul Jesu

இந்தியா மீது அணுவாயுதத் தாக்குதல் நடத்துவதற்கு தாங்கள் தயார் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் கவாஜா முகம்மது ஆசிப், நேற்று (சனிக்கிழமை)  தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் இந்திய இராணுவத் தளபதி பிபின் ராவத், பாகிஸ்தானின் எந்தவொரு தாக்குதலையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருந்த கருத்திற்குப் பதிலளிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

பாக்கிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் கவாஜா முகம்மது ஆசிப் தனது டுவிட்டர் பக்கத்தில்,

“இந்திய ராணுவ தளபதியின் இந்தப் பொறப்பற்ற பேச்சு அவரது பதவிக்கு ஏற்றதல்ல. இதன் மூலம் அவர் அணுஆயுத சண்டைக்கு அழைப்பு விடுகிறார். ஒருவேளை அது தான் இந்தியாவின் ஆசை என்றால், அவர்கள் வந்து எங்களின் பலத்தை சோதித்துப் பார்க்கட்டும். யார் பலம் வாய்ந்தவர்கள் என்பது விரைவில் காட்டப்படும்”  என குறிப்பிட்டுள்ளார்.

Pakisthan

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg