Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிட்னி டென்னிஸ் தொடரில் மகுடம் சூடினார் ஏஞ்சலிக் கெர்பர்!

In டெனிஸ்
Updated: 06:32 GMT, Jan 14, 2018 | Published: 06:24 GMT, Jan 14, 2018 |
0 Comments
1086
This post was written by : Anojkiyan

சிட்னி சர்வதேச டென்னிஸ் தொடரில், ஜேர்மனியின் நட்சத்திர வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் மகுடம் சூடியுள்ளார்.

அவுஸ்ரேலியாவில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற இறுதி போட்டியில், ஜேர்மனியின் நட்சத்திர வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பரும், அவுஸ்ரேலியாவின் அஷ்லெய்க் பேர்ட்டியும் பலப்பரீட்சை நடத்தினர்.

மிகவும் விறுவிறுப்பாக அரங்கேறிய இப்போட்டியில், கெர்பர் 6-4, 6-4 என நேர்செட் கணக்கில் அஷ்லெய்க் பேர்ட்டியை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றார்.

சுமார் 16 மாதங்களுக்கு பிறகு கெர்பர் சம்பியன் பட்டம் வென்றுள்ளார். கெர்பர் கடந்த 2016ஆம் ஆண்டு அமெரிக்க ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg