Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மகத்தான சாதனைக்காக காத்திருக்கும் பெடரர்

In டெனிஸ்
Updated: 07:07 GMT, Jan 14, 2018 | Published: 07:07 GMT, Jan 14, 2018 |
0 Comments
1134
This post was written by : Anojkiyan

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், கிண்ணம் வென்று சுவிஸ்லாந்தின் ரோஜர் பெடரர், சம்பியன் பட்டம் வெல்வார் என விளையாட்டு வல்லுனர்கள் கணித்துள்ளனர்.

36 வயதாகும் ரோஜர் பெடரர், நாளை முதல் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ள அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், சம்பியன் பட்டம் வெல்லும் பட்சத்தில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர் என்ற அவரது சாதனையை அவரே முறியடிப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

இந்த தொடரில் பல முன்னணி வீரர்கள் விலகியுள்ளதால் அவர் சம்பியன் பட்டம் வெல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

இதுவரை 19 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ரோஜர் பெடரர், 51 முறை கிராண்ட்ஸ்லாம் காலிறுதிக்கு நுழைந்துள்ளார். 41 முறை அரை இறுதிக்கு முன்னேறியுள்ளார். அதில், 29 முறை இறுதிபோட்டிக்கு முன்னேறியுள்ளார்.

இம்முறை அவர் அவுஸ்ரேலிய ஓபனில் சம்பியன் பட்டம் வெல்லும் பட்சத்தில், 20வது முறை சம்பியன் பட்டம் வென்று அதிக பட்டங்களை வென்ற ஆண் வீரர் என்ற பெருமையை பெறுவார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில், பெண் வீராங்கனைகளான மார்க்கரெட் கோர்ட் 24, செரீனா வில்லியம்ஸ் 23, ஸ்டெபி கிராப், 22 ஆகியோர் அதிக பட்டங்களை வென்றவர்கள். இதுவரை எந்த ஆண் வீரரும், 20 பட்டங்களை வென்றதில்லை. அந்த சாதனைக்கான வாய்ப்பு தற்போது பெடரருக்கு கிடைத்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg